நீதிமன்றத்தில் சரண் அடைந்த அதிமுக மாஜி மந்திரி..! நிலத்தை மிரட்டி வாங்கிய வழக்கால் சிக்கல்

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வயதான தம்பதியினரின் நிலத்தை மிரட்டி வாங்க முயன்ற வழக்கில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

Former AIADMK minister surrenders in court in land grabbing complaint

நிலம் அபகரிப்பு புகார்

அதிமுக ஆட்சி காலத்தில் சுற்றுலா துறை அமைச்சராக இருந்தவர் புத்திசந்திரன்,  உதகையில் மணிக்கல் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜூ மற்றும் அவரது மனைவி பிரேமா ஆகியோருக்கு சொந்தமான 15 சென்ட் தேயிலை தோட்டத்தை விலைக்கு கேட்டு மிரட்டியதுடன் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  நில அபகரிப்பு புகாரையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி புத்திசந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட 2,000 பேர் மீது வழக்குப்பதிவு.. காவல்துறை அதிரடி.. அதிமுகவினர் அதிர்ச்சி

Former AIADMK minister surrenders in court in land grabbing complaint

நீதிமன்றத்தில் ஆஜர்

வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து எந்த நேர்த்திலும் போலீஸ் கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தால் புத்திசந்திரன் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து புத்தி சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில்  முன் ஜாமின் பெற்றார்.  அவருக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியதை அடுத்து  நேற்று உதகையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். பின்னர் 2 பிணைய தாரர்கள் சாட்சி அளித்த பின் ஜாமினில் முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் வெளியே சென்றார்.

இதையும் படியுங்கள்

நான் திரும்பவும் சொல்கிறேன்.. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. பாஜகவை எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios