இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு
எத்தியோப்பியா பாலைவனத்தில் நிலப்பிரிவு ஏற்பட்டு உள்ளது. இது விரைவில் கடலாக மாறக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆப்பிரிக்கா கண்டம் உலகின் இரண்டாவது மிகப் பெரிய, அதிக மக்கள்தொகை கொண்ட கண்டம் ஆகும்.
இது பூமியின் மத்திய பகுதியில் அமைந்த நிலப்பரப்பு ஆகும். பூமியின் மொத்தப் பகுதியில் 6% பரப்பளவு அடங்கியது. உலக நிலப்பரப்பில் இது 20.4% ஆகும். இக்கண்டம் வடக்கு மத்தியதரை கடலால் சூழப்பட்டுள்ளது. வடகிழக்கில் சூயஸ் கால்வாய், சினாய் தீபகற்பம் மற்றும் செங்கடல், தென்கிழக்கில் இந்திய பெருங்கடல், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடல் இதன் எல்லைகளாக அமைந்து உள்ளன.
ஆப்பிரிக்காக் கண்டமானது கிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா, வடக்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆப்பிரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா என 5 துணை மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிழக்கு ஆப்ரிக்காவில் ரிப்ட் ஏற்பட்டு உள்ளது. அதாவது ரிப்ட் என்பது, ஒரு தட்டு உடைந்து இரண்டாக மாறுவது ஆகும்.
இதற்கு இடையில் தண்ணீர் புகுந்தால் அது இரண்டு நாடுகளாக, இரண்டு பகுதிகளாக மாறிவிடும் . இதுவாக இரண்டு தட்டுகள் நகர பல நூறு ஆண்டுகள் எடுக்கும். ஆனால் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இந்த நகர்வு வேகமாக நடக்கும் வாய்ப்புகளும் உள்ளது. அதன்படி 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில தட்டுகள் நகர்ந்து உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எத்தியோப்பியா பாலைவனத்தில் இந்த நில பிரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த பகுதியில் வரும் வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் புகுந்து அது கடலாக மாறும் என்றும் எச்சரித்துள்ளனர். பல லட்சம் ஆண்டுகளாக இந்த நிலப்பரப்பையும் கடல் பரப்பையும் ஒன்றாகவே பகிர்ந்துகொண்டிருக்கும் ஸாம்பியா மற்றும் உகாண்டா நாடுகள் எதிர்காலத்தில் தனித்தனி கடற்பரப்புகளைக் கொண்டவைகளாக மாறக்கூடும்.
இதையும் படிங்க..கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கணவன்.. வீடியோ எடுத்த மனைவி.. என்ன நடந்தது.?
சோமாலியா, கென்யாவின் ஒரு பகுதி மற்றும் எத்தியோப்பியா, தான்சானியா ஆகிய நாடுகள் பிரியும் பகுதிகளில் அடங்கி இருக்கும் என்று கருதப்படுகிறது. இங்கே உள்ள மூன்று நில அடுக்குகள் தனித்தனியாகப் பிரியத் தொடங்கிவிட்டது. இதனை நாம் சாதாரணமாக பார்த்தாலே தெரியும் என்று கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் இது வேகமாக நடக்கலாம். ஆனாலும் அடுத்த 500 வருடத்தில் இந்த புதிய கடல் தோன்ற வாய்ப்பு இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே இது நடக்க வாய்ப்புள்ளது என்றும், மேலும் திடீர் நிலநடுக்கம் போன்ற சம்பவங்கள் நடந்தால் இது கூடிய விரைவில் இது நடக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
இதையும் படிங்க..TN Rain: மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!
இதையும் படிங்க..ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ