Asianet News TamilAsianet News Tamil

வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை.. தமிழக அரசு அறிவிப்பு - முழு விபரம் உள்ளே

அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

Mature Tamil scholars can apply for the scholarship full details here
Author
First Published Mar 17, 2023, 2:58 PM IST

சேலம் மாவட்டத்தில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் உதவித்தொகை பெற தமிழ் அறிஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மண்டலத் தமிழ் வளா்ச்சி துணை இயக்குநா் க. பவானி வெளியிட்ட செய்தி குறிப்பில், “தமிழக அரசு தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில், அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Mature Tamil scholars can apply for the scholarship full details here

இத்திட்டத்தின்கீழ் 2022-2023-ஆம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கத் தகுதியாக 2022 ஜன. 1-ஆம் தேதி 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ. 72, 000-க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியா் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள், தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞா்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

இதற்கான விண்ணப்பப் படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 3, 500, மருத்துவப்படி ரூ. 500 வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

மேலும், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மண்டலத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் அலுவலகத்தில் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் அளிக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..TN Rain: மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

இதையும் படிங்க..கர்ப்பிணி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கணவன்.. வீடியோ எடுத்த மனைவி.. என்ன நடந்தது.?

Follow Us:
Download App:
  • android
  • ios