ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 சதவீதம் மானியத்துடன் வாகன கடன் உதவிகள் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு அரசு ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள்‌ புதிதாக சுயதொழில்‌ தொடங்க முதல்‌ தலைமுறை தொழில்‌ முனைவோரின்‌ தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, நெறிப்படுத்தி, ஊக்குவிக்கும்‌ நோக்கத்துடன்‌ புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ திட்டத்தினை 2012-13 முதல்‌ மாவட்டத்‌ தொழில்‌ மையம்‌ அலுவலகம்‌ மூலமாக செயல்படுத்தி வருகிறது.

ரூ.10 இலட்சத்துக்கு மேலும்‌ ரூ.50 இலட்சத்தை மிகாமலும்‌ உள்ள தொழில்‌ திட்டங்களுக்கு மானியத்துடன்‌ கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. மானியம்‌ திட்டத்‌ தொகையில்‌ 25% பட்டியல்‌ வகுப்பு, பட்டியல்‌ பழங்குடி இனம்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகளுக்குக்‌ கூடுதல்‌ மானியமாக திட்டத்தொகையில்‌ 10% வழங்கப்படுகிறது.

திட்டத்தின் கீழ் சுய தொழில் துவங்கி பயன்பெற விரும்புவோர் www. msmeonline. tn. gov. in/ needs என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்து பயன் படுத்தி கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதேபோல வேலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் (நீட்ஸ்) கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த திட்டத்தொகை ரூ.10 லட்சத்துக்கு மேல் ரூ.5 கோடிக்கு மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. 

திட்டத்தொகையில் 25 சதவீதம் மானியம், பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடி இனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் மானியமாக திட்டத்தொகையில் 10 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மானிய உச்சவரம்பு ரூ.75 லட்சமாகும். மேலும் கடனை திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க..TN Rain: மக்களே உஷார்.. தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

இதையும் படிங்க..இரண்டாக பிரியும் ஆப்பிரிக்க கண்டம்.. புதிதாக உருவாகும் கடல் - யாரும் பார்த்திராத அதிசய நிகழ்வு