ஆளுங்கட்சி என்ற மிதப்பா? அத்துமீறிய செயல்! இதை ஏத்துக்கவே முடியாது!திமுகவுக்கு எதிராக கொதிக்கும் கூட்டணி கட்சி

திமுக தலைமை உடனடியாக செயல்பட்டு, நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. காவலர்களின் புகார் அடிப்படையில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை அவசியமானது.‌ 

trichy DMK Clash.. CPIM Balakrishnan condemned

திமுகவினர் இடையேயான மோதலில் காவல் நிலையத்தில் புகுந்து தாக்கிய செயல் கண்டனத்துக்குரியது என திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

திருச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டிற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த டென்னிஸ் மைதானத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா அழைக்கப்படவில்லை என்றும், அவரது பெயர் கல்வெட்டில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவின் காரை முற்றுகையிட்டு கருப்பு கொடியை காட்டியுள்ளனர். 

இதையும் படிங்க;- நான் பேசுவதற்கு நிறைய உள்ளது...! ஆனால் நான் பேசக்கூடிய மன நிலையில் இல்லை.- திருச்சி சிவா வேதனை

trichy DMK Clash.. CPIM Balakrishnan condemned

இதனை அறிந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி எஸ்.பி.ஐ. காலனியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவின் வீட்டின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாற்காலிகள், இருசக்கர வாகனம், கார் கண்ணாடி ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து காவல்நிலையில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீது கே.என் நேருவின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், திமுக கூட்டணி இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது கண்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. 

trichy DMK Clash.. CPIM Balakrishnan condemned

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- திருச்சியில், திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டு அதை தொடர்ந்து காவல்நிலையத்திலும் புகுந்து தாக்கியுள்ளார்கள்.

இதையும் படிங்க;-  காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து திமுகவினர் வெறியாட்டம்.! யார் கட்டுப்பாட்டில் சட்டம் ஒழுங்கு.? இபிஎஸ் கேள்வி

இந்த அத்துமீறிய செயல் கண்டனத்திற்குரியது. அனுமதிக்க முடியாதது. ஆளும் கட்சி மிதப்பிலேயே சிலர் இதுபோல நடந்துகொள்கிறார்கள். திமுக தலைமை உடனடியாக செயல்பட்டு, நிர்வாகிகள் சிலரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது. காவலர்களின் புகார் அடிப்படையில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை அவசியமானது.‌ 

 

மேலும் கூடுதலாக இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கவே முடியாது என்று உறுதியாக அரசு‌ செயல்பட வேண்டும். பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அத்துடன் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தலை தடுத்தல் சட்டத்தின் கீழும் வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்துகிறோம் என தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios