Published : Jul 29, 2022, 07:12 AM ISTUpdated : Jul 30, 2022, 12:10 AM IST

Tamil News Highlights: சேலம் நந்திதா வெற்றி.. ஹாங்காங் அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா !!

சுருக்கம்

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடந்துவருகின்றன. மாமல்லபுரத்தில் நடந்துவரும் 44வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சார்பில் டீம் 'C' அணியில் இடம்பிடித்த எட்டு வீரர்களும் தற்போது வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஓப்பன் பிரிவில் அபிமன்யூ புரோனிக், முரளி கார்த்திகேயன், அபிஜீத் குப்தா, சேதுராமன் வெற்றி. பெண்கள் பிரிவில் பிரத்யுஷா, வர்ஷினி சஹிதி, நந்திதா, ஈஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Tamil News Highlights: சேலம் நந்திதா வெற்றி.. ஹாங்காங் அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா !!

08:30 PM (IST) Jul 29

செஸ் ஒலிம்பியாட்டில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா !

44வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா சார்பில் டீம் 'C' அணியில் இடம்பிடித்த எட்டு வீரர்களும் தற்போது வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஓப்பன் பிரிவில் அபிமன்யூ புரோனிக், முரளி கார்த்திகேயன், அபிஜீத் குப்தா, சேதுராமன் வெற்றி. பெண்கள் பிரிவில் பிரத்யுஷா, வர்ஷினி சஹிதி, நந்திதா, ஈஷா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

05:46 PM (IST) Jul 29

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவிற்கு முதல் வெற்றி

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடந்துவருகின்றன. மாமல்லபுரத்தில் நடந்துவரும் 44வது செஸ் ஒலிம்பியாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அப்துல் ரஹ்மான் முகமதுவை எதிர்கொண்ட இந்தியாவின் ரோனாக் சத்வானி வெற்றி பெற்றார். 44வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் வெற்றி இது.
 

05:45 PM (IST) Jul 29

அண்ணா பல்கலை மேடையிலும் அரசியலா..? அமைச்சர் பொன்முடியை போட்டு பொளந்த அண்ணாமலை.

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையிலும்,  அரசியலா? என கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு பதில் அளித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க

05:39 PM (IST) Jul 29

சென்னை பெருங்குடி அன்னை சத்யா நகரில், உறை கிணற்றை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி அச்சக உரிமையாளர் சரவணன் (49), கிணறு சுத்தம் செய்யும் தொழிலாளி காளிதாஸ் (55) இருவரும் பரிதாபமாக உயிரிழப்பு. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

04:53 PM (IST) Jul 29

மோடி ஹாப்பியோ ஹாப்பி.. ஸ்டாலின் காட்டிய செம்ம நெருக்கம்... விமானம் ஏறும் போது கொடுத்தாரு பாருங்க ஒரு பரிசு..!!

சென்னையில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செஸ் போர்டு காய்ன்ஸ் வுடன் பரிசாக வழங்கினார். பிரதமர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

 

03:33 PM (IST) Jul 29

செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று தொடங்கியது

மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் முதல் சுற்று தொடங்கியது. மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கிவைத்தார்.

செஸ் ஒலிம்பியாட் முதல் சுற்று தொடக்க நிகழ்வில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இன்றைய முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியா சார்பில் ஆடவர் ஏ, பி, சி மற்றும் மகளிர் ஏ, பி, சி என மொத்தம் 6 அணிகள் ஆடுகின்றன.

விரிவாக படிக்க - செஸ் ஒலிம்பியாட் 2022: முதல் சுற்றில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மோதும் போட்டிகள்..!
 

02:23 PM (IST) Jul 29

மக்களே உஷார் !! இன்று கனமழை.. 13 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை.. வானிலை அப்டேட்..

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.மேலும் படிக்க

02:02 PM (IST) Jul 29

ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்ட வெள்ளை தாமரையாய்... ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் காட்டும் நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால், வெள்ளை நிற அழகு தாமரை போல்... ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கும்முனு இருக்கும் அழகை வெளிப்படுத்தும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பார்க்க...
 

01:31 PM (IST) Jul 29

பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய லெஜண்ட் திரைப்படம்... முதல் நாள் வசூல் இவ்வளவு தானா?

பிரம்மாண்டமாக தயாரான தி லெஜண்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியானது. குறிப்பாக 2500 திரையரங்குகளுக்கு மேல் இப்படம் திரையிடப்பட்டது. இவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டும் இப்படம் மோசமான விமர்சனங்களையே பெற்று வருகிறது. தற்போது, இப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

01:27 PM (IST) Jul 29

கள்ளக்காதல் உறவால் பிறந்த குழந்தை.. சுவற்றில் மோதி.. கழுத்தை இறுக்கி கொன்று புதைப்பு.. தாய், பாட்டி கைது

கள்ளக்காதல் உறவால் பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமறைவாக இருந்த தாய் மற்றும் பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேலும் படிக்க

12:56 PM (IST) Jul 29

நயன்தாரா வெடிங் ஸ்டைலை... காபி அடித்த கீர்த்தி சுரேஷ்! சும்மா தங்க சிலை மாதிரி ஜொலிக்கும் போட்டோஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் ட்ரேடிஷ்னல் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க...
 

12:55 PM (IST) Jul 29

பிரபல நடிகர் மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல மராத்தி நடிகர் அரவிந்த் தானு, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மேடையிலேயே மழுங்கி விழுந்தார். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...
 

12:54 PM (IST) Jul 29

நெருப்புடன் விளையாட வேண்டாம்... அமெரிக்காவை ஏறி அடித்த ஜி ஜின்பிங்... வெலவெலத்துப் போன பிடன்

நெருப்புடன் விளையாட வேண்டாம் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் அமெரிக்காவை எச்சரித்துள்ளார். தைவான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு  கூறியுள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க
 

12:38 PM (IST) Jul 29

குமரியில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறி காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

12:08 PM (IST) Jul 29

மோடியும், ஸ்டாலினும் ‘வாவ்’ என வியந்து பாராட்டிய செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழா வெற்றியடைய காரணம் இந்த இயக்குனரா?

செஸ் ஒலிம்பியாட் துவக்கவிழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை அனைவரும் வியந்து பாராட்டிய விஷயம் என்றால் குறுகிய நாட்களில் இவ்வளவு பிரம்மாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது பற்றி தான். மேலும் படிக்க

11:54 AM (IST) Jul 29

மீண்டும் இணைய வாய்ப்பில்லை.. ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு

மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா என உச்சநீதிமன்றம் கேட்டதற்கு இல்லை என ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் என்ன நடந்தது என ஓபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு கட்சியின் அடிப்படை விதிகளை மீறி அத்தனை முடிவுகளையும் பொதுக்குழுவில் எடுத்தனர் என ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

11:39 AM (IST) Jul 29

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கு - ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் புதிய ஜாமீன் மனு தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாணவி மரண வழக்கில் பள்ளி முதல்வர், தாளாளர், செயலாளர், இரு ஆசிரியர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
 

11:13 AM (IST) Jul 29

பட்டம் பெறும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.. பிரதமர் மோடி

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று பிரதமர் மோடி  உரையாற்றி வருகிறார். இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். சென்னை மாணவர்களின் சாதனையை கொண்டாடுவதற்காக நாம் இங்கு கூடியுள்ளோம். நீங்கள் தான் தேசத்தை கட்டமைப்பவர்கள், நாளைய தலைவர்கள் என மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய இளைஞர்களை வரவேற்க உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் எதிர்நோக்கி உள்ளனர். ஒட்டுமொத்தத உலக நாடுகளும் இந்தியாவை உற்றுநோக்கி கொண்டிருக்கின்றன. 

மேலும் படிக்க

 

அண்ணா பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா அரங்கில் இட நெருக்கடி காரணமாக பல வகுப்பறைகளில் பட்டதாரி மாணவர்கள் அமரவைக்கப்பட்டனர். விழா முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, பட்டதாரி மாணவர்கள் அமர்ந்திருந்த ஒவ்வொரு வகுப்பறைகளுக்கும் சென்று அவர்கள் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசினார்.

10:47 AM (IST) Jul 29

பட்டம் பெற்ற நீங்கள் தான் இந்த நாட்டின் திருவிளக்கு.. முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ள அண்ணா பல்கலைக்கழக 42வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். செஸ் ஓலிம்பியாட் நேற்று தொடக்கி வைத்த பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் ஒரு முறை நன்றி. பட்டங்கள் என்பவை வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல. அறிவினை பெருக்குவதற்கும் தான். 

10:26 AM (IST) Jul 29

பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி வரவேற்புரை

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி வரவேற்புரை ஆற்றினார். அப்போது, அவர் பேசுகையில் அரசு பள்ளியில் படிக்கம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

10:05 AM (IST) Jul 29

அண்ணா பல்கலைக்கழகம் வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வந்த பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

10:02 AM (IST) Jul 29

பிரதமரை சந்திக்கிறார் ஓபிஎஸ்?

பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

09:57 AM (IST) Jul 29

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி புறப்பட்டார்

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டார்.  விழாவில் தலைமை உரையாற்றி 69 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ்களை வழங்குகிறார். 

09:54 AM (IST) Jul 29

சந்தானத்தின் குலுகுலு திரைப்படம் பாதியில் நிறுத்தம்

சென்னையில் உள்ள புகழ்பெற்ற ரோகினி திரையரங்கில் குலுகுலு படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதற்கு சந்தானம் ரசிகர்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. ஏனெனில் சந்தானம் ரசிகர்கள் சிலர் டிக்கெட் எடுக்காமல் தியேட்டருக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.மேலும் படிக்க

09:28 AM (IST) Jul 29

அதிமுகவில் புதிதாக 10 மாவட்ட செயலாளர்கள் நியமனம்..! மீண்டும் மீண்டும் இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுக்கும் ஓபிஎஸ்

நீலகிரி, திருவண்ணாமலை உட்பட 10 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்து எடப்பாடி பழனிசாமிக்கு  ஓ.பன்னீர் செல்வம் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க..

09:27 AM (IST) Jul 29

ஓடி ஒளியும் திமுக அமைச்சர்கள்...! ஆண்மகனாக இருந்தால் அண்ணாமலை மீது வழக்கு தொடருங்கள்... சவால் விடும் பாஜக

மின் வாரிய முறைகேடு தொடர்பாக புகார் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தைரியமான ஆண் மகனாக இருந்தால் வழக்கு தொடருங்கள் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாஜக நிர்வாகி நாரயணன் திருப்பதி சவால் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க..

09:06 AM (IST) Jul 29

எடப்பாடி பழனிசாமிக்கு மருத்துவ பரிசோதனை

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தின் போது மயங்கிய நிலையில், பரிசோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

09:04 AM (IST) Jul 29

நாக சைதன்யா உடன் வாழ்ந்த வீட்டை மீண்டும் பல கோடி கொடுத்து வாங்கிய சமந்தா

நடிகை சமந்தா, தான் விவாகரத்து செய்வதற்கு முன் நாக சைதன்யாவுடன் ஐதராபாத்தில் வாழ்ந்த வீட்டை பல கோடி கொடுத்து மீண்டும் வாங்கி உள்ளாராம். இந்த தகவலை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான முரளி மோகன் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.மேலும் படிக்க

08:16 AM (IST) Jul 29

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா.. மோடியுடன் மேடை ஏறும் முருகன்.. ஸ்டாலினோடு விழாவுக்கு வரும் பொன்முடி

அண்ணா பல்கலைக்கழகத்தின்  42-வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் படிக்க

07:17 AM (IST) Jul 29

தமிழகத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

மேலும் படிக்க

07:17 AM (IST) Jul 29

சென்னை செஸ் ஒலிம்பியாட்.. மாஸ் காட்டும் மு.க. ஸ்டாலின்.. மாநில முதல்வர்கள் வரிசையாக வாழ்த்து.!

சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற பல்வேறு மாநில முதல்வர்கள் தமிழக அரசுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

07:16 AM (IST) Jul 29

தமிழகத்திற்கு செஸ் விளையாட்டுடன் வரலாற்றுத் தொடர்பு உள்ளது.. தமிழர் பெருமையை பரைசாற்றிய மோடி.

தமிழ்நாட்டுக்கும் செஸ் போட்டிக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புகள் உள்ளது என்றும், விளையாட்டிற்கென தனி கோயில் உள்ளது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். 

மேலும் படிக்க

07:16 AM (IST) Jul 29

இன்று திருப்பூரில் இந்தெந்த பகுதிகளில் மின்தடை.. மக்களே 7 மணி நேரம் வரை கரண்ட் இருக்காது..!

திருப்பூர் நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க

07:15 AM (IST) Jul 29

பிரபுவின் கதை தான் வேதனையான எடுத்துக்காட்டு.. எதுக்கு தடை செய்ய தயங்குறீங்க.. ராமதாஸ் காட்டமான கேள்வி

ஆன்லைன் சூதாட்டத்தடை நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஓராண்டில் நிகழும் 27ஆவது தற்கொலை இதுவாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

07:14 AM (IST) Jul 29

ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு! உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

கடந்த 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது அதிமுக தலைமை சார்பில் எஸ்.பி.வேலுமணி உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

07:13 AM (IST) Jul 29

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா பிரதமர் மோடி பங்கேற்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இன்று காலை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின் பிரதமர் மோடி சென்னையிலிருந்து டெல்லி புறப்படுகிறார்.