Asianet News TamilAsianet News Tamil

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா.. மோடியுடன் மேடை ஏறும் முருகன்.. ஸ்டாலினோடு விழாவுக்கு வரும் பொன்முடி.!

அண்ணா பல்கலைக்கழகத்தின்  42-வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

Anna University graduation ceremony today.. PM Modi will participate
Author
Chennai, First Published Jul 29, 2022, 8:07 AM IST

அண்ணா பல்கலைக்கழகத்தின்  42-வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதை அடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் இன்று காலை 10 முதல் 11.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் தலைமை விருந்தினராக பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க;- பேச்சிலும் செயலிலும் முதல்வராக நடந்துகொண்டார்.. முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டித் தள்ளிய அண்ணாமலை..!

Anna University graduation ceremony today.. PM Modi will participate

பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 69 மாணவர்களுக்கு பிரதமர் மோடி, பதக்கங்களை வழங்க உள்ளார். மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை ஆளுநர் வழங்குகிறார். முதல்வர் சிறப்புரை ஆற்றுகிறார். விழாவில் பிரதமர் பங்கேற்பதால் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

Anna University graduation ceremony today.. PM Modi will participate

கடந்த ஜூலை 13-ம் தேதி நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார். விழா அழைப்பிதழில் உயர் கல்வி அமைச்சர் பொன்முடியின் பெயருக்கு மேல் எல்.முருகனின் பெயர் இடம்பெற்றது பெரும் சர்ச்சையானது. இதனால், பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இருவரது பெயர்களும் சரிசமமான அளவில் முதல்வர் பெயருக்கு கீழ் இடம் பெற்றுள்ளது. 

இதையும் படிங்க;-  எதிர்க்கட்சியா இருந்தப்ப கறுப்புக்கொடி... இப்ப அடக்குமுறையா? திமுகவை விளாசும் சீமான்!!

Follow Us:
Download App:
  • android
  • ios