மோடி ஹாப்பியோ ஹாப்பி.. ஸ்டாலின் காட்டிய செம்ம நெருக்கம்... விமானம் ஏறும் போது கொடுத்தாரு பாருங்க ஒரு பரிசு..!!

சென்னையில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செஸ் போர்டு காய்ன்ஸ் வுடன் பரிசாக வழங்கினார். 

The Chief Minister of Tamil Nadu presented a chess board to PM Modi at the airport.

சென்னையில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செஸ் போர்டு காய்ன்ஸ் வுடன் பரிசாக வழங்கினார். பிரதமர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற ஒலிம்பியாட் செஸ் போட்டி நேற்று சென்னையில் தொடங்கியது, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி செஸ் போட்டிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக சென்னை விமான நிலையம் வருகைதந்த  பிரதமரை தமிழக மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி,  கே. என் நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் வழிநெடுகிலும் பாஜக சார்பில் பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. விழா அரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, குறிப்பாக தமிழர்களின் பாரம்பரியம் தமிழ் மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் நிகழ்த்து கலை அரங்கேற்றப்பட்டது. 

The Chief Minister of Tamil Nadu presented a chess board to PM Modi at the airport.

அப்போது விழா மேடையில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடி இணைந்து செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தீபத்தை விஸ்வநாத் ஆனந்த் இடம் வழங்கினர். அப்போது இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக முதலமைச்சரும் பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டினார். இதற்கு முன்பாக அதே இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டே முதலமைச்சர் ஸ்டாலின் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்டவற்றை கணக்கு கேட்டார், பிரதமருக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமருடன் இணக்கமாகவே முதலமைச்சர் நடந்துகொண்டாது அனைவரது கவனத்தையுப் ஈர்த்தது 

இதையும் படியுங்கள்: சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது... பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு!!

பிரதமர்  சதுரங்கம் கரை வைத்த வெள்ளை வேட்டி சட்டையில் வருகை தந்திருந்தார், முதலமைச்சர் ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டை உடுத்தியிருந்தார். அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து உடல்நலம் விசாரித்தார் என்றும், எனது நிலைமையை புரிந்துகொண்டு நிச்சயம் வருகிறேன் என வாக்குறுதி அளித்தார் என்றும், பிரதமர் குறித்து ஸ்டாலின் நெகிழ்ந்து பேசினார். பிரதமர் மேடைக்கு வந்தவுடன் ஸ்டாலின் அவரை இன்முகத்துடன் வரவேற்று மாமல்லபுரம் கடற்கரை கோவில் சிற்பத்தை வழங்கினார்,  அதை பிரதமர் மோடி முகமலர்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்.

The Chief Minister of Tamil Nadu presented a chess board to PM Modi at the airport.

இருவரும் அருகருகில் அமர்ந்து இடையிடையே நட்பாக உரையாடிக் கொண்டிருந்தனர். சீனா அதிபர் தமிழகம் வந்தபோது பிரதமர் அவரை மாமல்லபுரத்தில் வைத்துதான் சந்தித்தார். மாமல்லபுரம் என்பது பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான இடம் என்பதை அறிந்து கொண்டு முதலமைச்சல் அவருக்கு கடற்கரைக் கோவில் சிற்பத்தை வழங்கியதாக கூறப்படுகிறது, மேடையில் நிகழ்ச்சி முடியும் வரை பிரதமரும் முதலமைச்சரும் இணக்கமாகவே இருந்தனர்,  இது பாஜக -திமுக தொண்டர்கள் மத்தியில் ஒருவித நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமரும் முதலமைச்சரும் கலந்து கொண்டனர், அங்கேயும் அவர்கள் நெருக்கம் காட்டினர். 

இதையும் படியுங்கள்: அடி தூள்...சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டி..! மோடிக்கு கோரிக்கை வைத்து அசத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்

அப்போது உரையாற்றிய முதல்வர், பிரதமர் மோடியின் கையால் மாணவர்கள் பட்டம் பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்று மோடியை புகழ்ந்து பேசினார், இந்நிலையில் பிரதமர் மோடி இன்று பிற்பகல் 12 மணியளவில் 2 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்டார், அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என் ரவி வழியனுப்பி வைத்தனர். (இந்திய விமானப்படை விமானம் மூலம் பிரதமர் குஜராத் மாநிலம் அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார்) அப்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செஸ் ஒலிம்பியாட் நினைவாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காய்களுடன் சதுரங்க பலகை வழங்கினார்.

The Chief Minister of Tamil Nadu presented a chess board to PM Modi at the airport.

அதை சற்றும் எதிர்பாராத பிரதமர் அவை மிகுந்த ஆச்சரியத்துடனும் மகிழ்ச்சியுடனும் பெற்றுக்கொண்டார். அதில் ஆளுநர், மத்திய அமைச்சர்கள் முருகன் உள்ளிட்டோர் மகிழ்ந்து போயினர். கடந்த பயணத்தின்போது காடுமை காட்டிய ஸ்டாலின் இந்த முறை இதமாக நடந்து கொண்டது பாஜகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios