சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது... பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு!!
சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி மற்றும் கனிமொழி எம்பி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு சென்று கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு சென்றடைந்தார். அவரை வழிநெடுங்கிலும் மக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
இதையும் படிங்க: அடி தூள்...சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டி..! மோடிக்கு கோரிக்கை வைத்து அசத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்
பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சியை பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து நாட்டு செஸ் வீரர்களும் ரசித்து பார்த்தனர். இதையடுத்து 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த விழாவுக்கு பின் சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இன்று காலை 10 மணிக்கு கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் சென்ற பிரதமர் மோடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: தடைகளை எல்லாம் வாய்ப்புகளாக மாற்றி இந்தியா முன்னேறி வருகிறது - பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு
விழா முடிந்ததும் நேராக பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் குஜராத் மாநிலம் அகமதாபாத் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர்கள் அனுராத்தாக்கூர், எல்.முருகன், தயாநிதி மாறன் எம்பி, தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, அரசு உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு சதுரங்க பலகையை நினைவுப் பரிசாக வழங்கினார். இந்த நிலையில் சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், இந்தியாவின் சமையல் பன்முகத்தன்மை புகழ்பெற்றது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் நீங்கள் ஒரு உணவைக் காண்பீர்கள். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. சென்னை நகரத்தை சுற்றிப் பார்ப்பதில் மகிழ்ச்சி. சென்னை பயணம் மறக்க முடியாததாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.