அடி தூள்...சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டி..! மோடிக்கு கோரிக்கை வைத்து அசத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக் கோரி பிரதமர் மோடிக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 

Chief Minister Stalin letter to the Prime Minister asking for permission to hold the Asian Beach Tournament in Chennai

சென்னையில் ஆசிய கடற்கரை போட்டி

சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சென்னையில் நடைபெற்ற 44-வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டமைக்கும், இவ்விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்தமைக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் இந்தியப் பிரதமர் அவர்கள் காட்டிவரும் ஆர்வத்தை தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.இந்தநிலையில்  சென்னையில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதுவதற்குரிய ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓபிஎஸ்- இபிஎஸ் இல்லாமல் ஆலோசித்த மோடி ..! அதிமுக உட்கட்சி விவகாரங்களை புட்டு புட்டு வைத்த பாஜக நிர்வாகிகள்

தடைகளை எல்லாம் வாய்ப்புகளாக மாற்றி இந்தியா முன்னேறி வருகிறது - பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

Chief Minister Stalin letter to the Prime Minister asking for permission to hold the Asian Beach Tournament in Chennai

மத்திய அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்

தமிழ்நாடு அரசின் வேண்டுகோளையேற்று 2024 ஜனவரியில் ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு. 6-5-2022 அன்று தாஷ்கண்டில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உத்தரவாதங்களை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் வழங்கிட வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.  ஏற்கெனவே மாண்புமிகு ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இதுதொடர்பாக 23-5-2022 அன்று கடிதம் எழுதியுள்ளதாகவும், செப்டம்பர் 2022 இறுதிக்குள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்த உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டியுள்ளதால். இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் விரைவில் அதனை வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை  கேட்டுக் கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

MiG-21: இந்திய போர் விமானம் வெடித்து சிதறியது..2 வீரர்கள் வீரமரணம்.. விபத்திற்கான காரணம் என்ன..?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios