- Home
- Cinema
- நாக சைதன்யா உடன் வாழ்ந்த வீட்டை மீண்டும் பல கோடி கொடுத்து வாங்கிய சமந்தா - சைலண்டாக நடந்து முடிந்த டீல்
நாக சைதன்யா உடன் வாழ்ந்த வீட்டை மீண்டும் பல கோடி கொடுத்து வாங்கிய சமந்தா - சைலண்டாக நடந்து முடிந்த டீல்
நடிகை சமந்தா, தான் விவாகரத்து செய்வதற்கு முன் நாக சைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை பல கோடி கொடுத்து வாங்கி உள்ளதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறி இருக்கிறார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா, இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு பட ஹீரோ நாக சைதன்யாவை காதலித்து கல்யாணம் பண்ணிக்கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னரும் இருவரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தனர்.
4 ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிவுக்கு வந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். நட்சத்திர ஜோடியான சமந்தாவும் நாக சைதன்யாவும் திடீரென விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்தது பலருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.
இதையும் படியுங்கள்... விபச்சார கேஸில் பிடிபட்ட நடிகை மீண்டும் போலீசில் சிக்கினார்.. சினிமா பாணியில் சேஸிங் செய்து கைது பண்ணிய போலீஸ்
விவாகரத்துக்கு பின்னர் இருவரும் படங்களில் படு பிசியாக நடிக்கத் தொடங்கி உள்ளனர். நடிகை சமந்தா கைவசம் யசோதா, சகுந்தலம், குஷி போன்ற படங்கள் உள்ளன. அதேபோல் நாக சைதன்யாவும் அமீர்கான் உடன் இணைந்து லால் சிங் சத்தா என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆக்ஸ்ட் மாதம் ரிலீசாக உள்ளது.
Samantha
இந்நிலையில், நடிகை சமந்தா, தான் விவாகரத்து செய்வதற்கு முன் நாக சைதன்யாவுடன் ஐதராபாத்தில் வாழ்ந்த வீட்டை பல கோடி கொடுத்து மீண்டும் வாங்கி உள்ளாராம். இந்த தகவலை பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான முரளி மோகன் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அவரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... மனசுல விஷ்ணு விஷால்னு நெனப்பா?... பெட்ரூமில் நிர்வாண போஸ் கொடுத்த விஜய் டிவி பிரபலத்தை விளாசும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.