தமிழகத்தில் பாஜகவின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த 44ஆம் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதியை கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான விஸ்வநாதன் ஆனந்த் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். அதை முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வழங்கினார். இந்த ஜோதியை இளம் கிராண்ட் மாஸ்டர்களான குகேஷ், பிரக்ஞானந்தா ஏற்றினர்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு செஸ் விளையாட்டுடன் வரலாற்றுத் தொடர்பு உள்ளது.. தமிழர் பெருமையை பரைசாற்றிய மோடி.
இந்த போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 1736 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொடங்கி வைத்தார். நாளை முதல் மாமல்லபுரத்தில் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கிண்டி ஆளுநர் மாளிகை சென்றடைந்தார். அங்கு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார்.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் செலவு தமிழக அரசின் நிதியா.? அப்போ தடுப்பூசி யாருடைய செலவு.? திமுகவினருக்கு பாஜக கேள்வி!
இந்த ஆலோசனையில், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதில் 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் பிரதிநிதித்துவம் பெறுவது குறித்தும் தமிழக அரசியலில் பாஜக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்துவதாக கூறப்படுகிறது. இதனிடையே பிரதமர் மோடி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நாளை பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.