Asianet News TamilAsianet News Tamil

செஸ் ஒலிம்பியாட் செலவு தமிழக அரசின் நிதியா.? அப்போ தடுப்பூசி யாருடைய செலவு.? திமுகவினருக்கு பாஜக கேள்வி!

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பிரதமர் இருட்டடிப்பு செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. இது மலிவான அரசியலே என்று தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Is Chess Olympiad funded by Tamil Nadu Government? Whose cost is the vaccine? BJP question to DMK!
Author
Chennai, First Published Jul 28, 2022, 10:32 PM IST

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெறாதது குறித்து பாஜகவினர் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அருகே பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படத்தை பாஜகவினர் ஒட்டினர். அந்தப் புகைபடத்தின் மீது தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்கள் கறுப்பு சாயம் பூசினார்கள். மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிதியில் நடைபெறும் நிகழ்வு என்பதால் முதல்வர் படம் இடம் பெற்றிருப்பதாக சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் இதற்கு தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளித்திருக்கிறார்.

இதையும் படிங்க: எதிர்க்கட்சியா இருந்தப்ப கறுப்புக்கொடி... இப்ப அடக்குமுறையா? திமுகவை விளாசும் சீமான்!!

Is Chess Olympiad funded by Tamil Nadu Government? Whose cost is the vaccine? BJP question to DMK!

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “பிரதமரின் படம் சதுரங்க ஒலிம்பியாட் விளம்பரங்களில் இடம் பெறாதது ஏன் என்ற கேள்விக்கு, இது மாநில அரசு நிதியில் நடைபெறுகிறது, அதனால் அவசியமில்லை என்கிறார்கள் திமுகவினர். இது முறையற்ற வாதம். அப்படியானால், தடுப்பூசிகள் முழுவதையும் மத்திய அரசே அளித்த  நிலையில், தமிழகத்தில் அது குறித்த விளம்பரங்களில் முதலமைச்சர் படம் இடம் பெற்றது என்பதோடு,  பிரதமரின் படம் இடம் பெறவில்லையே? அது தவறு என்று ஒப்பு கொள்வார்களா? தடுப்பூசி குறித்த விளம்பரங்களில் முதலமைச்சரின் படம்  இடம்பெற்றது ஏன் என்று நாம் கேட்கவில்லை, பிரதமரின் படம் தவிர்க்கப்பட்டது ஏன் என்றுதான் கேட்டோம். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பிரதமர் இருட்டடிப்பு செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது. இது மலிவான அரசியலே.
இதையும் படிங்க: மோடி படத்தை ஒட்டிய பாஜகவினரை ஏன் கைது செய்யவில்லை.? பாஜகவினரை குளிர வைக்கிறீங்களா.? கே.எஸ். அழகிரி ஆவேசம்!

Is Chess Olympiad funded by Tamil Nadu Government? Whose cost is the vaccine? BJP question to DMK!
சதுரங்க போட்டிகளை பொறுத்தவரை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கண்காணித்து கொண்டிருப்பார்கள் என்பதால், உலகமே கொண்டாடும் நம் பிரதமரை அழைத்து துவக்குவது  கௌரவம் என்று கருதி அழைக்கும் திமுக அரசு, அவருக்கு உரிய மரியாதையை அளிக்க தவறுவதைதான் நாம் சுட்டி காட்டுகிறோம். கூட்டாட்சி தத்துவம் என்று எப்போதும் துள்ளிக்குதிப்பவர்கள், பிரதமரின் படம் இடம் பெற்றால் முதல்வரின் முக்கியத்துவம் குறைந்து விடும் என்ற அச்சத்தில் அவரை தவிர்ப்பது மலிவான அரசியலே. எப்படி, ஒரு மாநிலம் தன் நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை பெற்றுள்ளது, அதே போல் இந்தியா தனது நிர்வாக வசதிக்காகதான் மாநிலங்களை உருவாக்கியது என்பதையும், இந்திய அரசு தன் நிர்வாக வசதிக்காக பல மாநிலங்களை மேலும் உருவாக்கி கொள்ளும் அதிகாரம் படைத்தது என்பதையும், கூட்டாட்சி என்பது ஒருவழிப் பாதையல்ல, இரு வழிப்பாதை என்பதையும் திராவிட முன்னேற்ற கழகம் மறந்து விடக்கூடாது.” என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 
 

இதையும் படிங்க:  சென்னை செஸ் ஒலிம்பியாட்.. மாஸ் காட்டும் மு.க. ஸ்டாலின்.. மாநில முதல்வர்கள் வரிசையாக வாழ்த்து.!

Follow Us:
Download App:
  • android
  • ios