சென்னை செஸ் ஒலிம்பியாட்.. மாஸ் காட்டும் மு.க. ஸ்டாலின்.. மாநில முதல்வர்கள் வரிசையாக வாழ்த்து.!
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற பல்வேறு மாநில முதல்வர்கள் தமிழக அரசுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் முதன் முறையாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுகிறது. 188 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து ஆடவர் அணி, மகளிர் அணியில் என தலா 3 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் கோலாகலமாகத் தொடங்கியது. போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் தொடக்க விழாவில் பங்கேற்க பல்வேறு மாநில முதல்வர்களுக்கும் தமிழக அரசு சார்பில் அழைப்பிதழ் திமுக எம்.பி.க்கள் மூலம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் லோகோ சதுரங்க குதிரைக்கு தம்பி என்று எதற்கு பெயர்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!!
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநில முதல்வர்கள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தமிழக முதல்வர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாகத் தொடர்புக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்தார். இதேபோல கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் ஆகியோர் செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகச் சிறப்பாக நடைபெற தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழகத்திற்கு செஸ் விளையாட்டுடன் வரலாற்றுத் தொடர்பு உள்ளது.. தமிழர் பெருமையை பரைசாற்றிய மோடி.
மேலும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ஹரியானா முதல்வர் மனோகர் லால் ஆகியோர் தங்களுடைய சமூக வலைதளங்கள் மூலம் சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: இரு கைகளில் இரு பியானோ, இரு இசை..! உலகையே வியக்கவைத்த தமிழன்.. யார் இந்த லிடியன் நாதஸ்வரம்..?