Published : Jul 18, 2022, 07:11 AM ISTUpdated : Jul 18, 2022, 10:22 PM IST

TamilNews Highlights: வன்முறை விவகாரம்: நாளை தனியார் பள்ளிகள் இயங்குமா?அறிவிப்பு வெளியானது

சுருக்கம்

கள்ளிக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையை கண்டித்து, தனியார் பள்ளிகள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவித்திருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அதனை தொடர்ந்து , நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TamilNews Highlights: வன்முறை விவகாரம்: நாளை தனியார் பள்ளிகள் இயங்குமா?அறிவிப்பு வெளியானது

09:13 PM (IST) Jul 18

ஒரே படத்தில் ரஜினி - கமல்..வேற லெவலில் தயாராகும் லோகேஷ் கூட்டணி!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர்  படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் இணைவார் என தெரிகிறது.

மேலும் படிக்க.. ஒரே படத்தில் ரஜினி - கமல்..வேற லெவலில் தயாராகும் லோகேஷ் கூட்டணி!

09:12 PM (IST) Jul 18

அடேங்கப்பா..இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்..கிளாமர் போட்டோஸ் இதோ!

திடீர் என சமூக வலைதளத்திற்கு என்ட்ரி  கொடுத்த மீரா ஜாஸ்மின் தனது மொத்த உடல் எடையையும் கரைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார்.

மேலும் படிக்க.. அடேங்கப்பா..இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் மீரா ஜாஸ்மின்..கிளாமர் போட்டோஸ் இதோ!

09:08 PM (IST) Jul 18

சம்பளத்தை உயர்த்திய சூர்யா?..வெளியான சுவாரஸ்ய தகவல்

சூர்யா குறித்தான புதிய அப்டேட் ஆக அவரது சம்பளத்தை உயர்த்தி விட்டார் என கூறப்படுகிறது. அதாவது இவர் அடுத்ததாக நடிக்க உள்ள வாடிவாசல் படத்திற்கு ரூ. 28 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க...சம்பளத்தை உயர்த்திய சூர்யா?..வெளியான சுவாரஸ்ய தகவல்

09:08 PM (IST) Jul 18

சாதிவெறி பிடித்தவள் என விமர்சிக்கிறார்கள்.. இரவின் நிழல் நாயகியின் உருக்கமான பேட்டி!

சரியான விளக்கத்தை சொல்லாமல் விட்டது என்னுடைய தவறுதான். தப்பாக பேசி இருக்கக் கூடாது. தெரியாமல் பேசி விட்டேன். என்னை மன்னிக்க வேண்டும் என பிரிகிடா கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க..சாதிவெறி பிடித்தவள் என விமர்சிக்கிறார்கள்.. இரவின் நிழல் நாயகியின் உருக்கமான பேட்டி!

07:58 PM (IST) Jul 18

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது... 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் மின் கட்டணம்!!

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும். 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

06:21 PM (IST) Jul 18

திரைப்பட டிஜிட்டல் திருட்டு ..அதிரடியாக களம் இறங்கிய அருண் விஜய்!

டிஜிட்டல் திருட்டு என்பது பரபரப்பான விவாதத்தில் இருக்கும் நிலையில் இந்த தொடர் வரவேற்பு பெரும் என தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்து வருகிறது.

மேலும் படிக்க...திரைப்பட டிஜிட்டல் திருட்டு ..அதிரடியாக களம் இறங்கிய அருண் விஜய்!

06:20 PM (IST) Jul 18

பான் இந்தியா படமாக ஏ கே 61..டோலிவுட் நடிகர்களை களமிறக்கும் படக்குழு!

முக்கிய வேடங்களில் மஞ்சு வாரியர், வீரா,ஜான் கொக்கன் மற்றும் மகாநதி சங்கர் ஆகியோர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் படிக்க...பான் இந்தியா படமாக ஏ கே 61..டோலிவுட் நடிகர்களை களமிறக்கும் படக்குழு!

06:19 PM (IST) Jul 18

பிளாக் அண்ட் ஒயிட்டில் போல்ட் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே..வைரல் போட்டோஸ் இதோ!

பெரும்பாலும் மிகவும் பளபளப்பான அறிமுகத்தையும் நடிகைகள் தேர்வு செய்கிறார்கள். ஆனால் நான் அவர்களில் ஒருத்தி அல்ல என குறிப்பிட்டு இருந்தார் ஷாலினி பாண்டே.

மேலும் படிக்க...பிளாக் அண்ட் ஒயிட்டில் போல்ட் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே..வைரல் போட்டோஸ் இதோ!

06:17 PM (IST) Jul 18

முன்னாள் காதலருடன் உறவு கொள்வீர்களா? கரண் ஜவஹர் கேள்விக்கு ஜான்வி கொடுத்த பளீச் பதில்!

பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், ஜான்வி கபூரிடம், ‘காஃபி வித் கரண்’ சீசன் 7 இல், தனது முன்னாள் காதலனுடன் உடலுறவு கொள்வீர்களா என்று கேட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் படிக்க...
 

05:29 PM (IST) Jul 18

மாணவியின் தந்தை கோரிக்கை நிராகரித்த நீதிபதி.. உத்தரவை மாற்ற முடியாது என்று கருத்து

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதால், கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறு உடல் கூராய்வு செய்ய பிறப்பித்த தனி நீதிபதி உத்தரவை நிறுத்திவைக்குமாறு மாணவியின் தந்தை செய்த மேல்முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என்றும் வேண்டுமானால் சிபிசிஐடிக்கும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கும் மனு அளித்துக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

05:20 PM (IST) Jul 18

ஒரே பள்ளியில் நிகழ்ந்த 5 மரணங்கள்.. சுவரில் இருந்தது ரத்தக்கறை இல்லை பெயிண்ட்..? சர்ச்சையாகும் சக்தி பள்ளி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குனியமூரில் உள்ள சக்திப் பள்ளியில் கடந்த காலங்களில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து இறந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கடந்த ஜூலை 13 ஆம் தேதி மாணவி பள்ளியின் 2 வது மாடியில் இருந்து குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பள்ளிநிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும் படிக்க
 

04:37 PM (IST) Jul 18

இலங்கையில் விவசாயிகள் கடன் ரத்து... அறிவித்தார் அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்க!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதை அடுத்து மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மகிந்த ராஜபக்சே, கோட்டபய  ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை அடுத்து மக்கள் போராட்டம் வலுத்ததால் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதை அடுத்து ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

04:25 PM (IST) Jul 18

அனைத்து தனியார் பள்ளிகளும் நாளைமுதல் இயங்கும் - வேலைநிறுத்தம் வாபஸ்

கள்ளிக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையை கண்டித்து, தனியார் பள்ளிகள் அறிவித்திருந்த வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவித்திருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அதனை தொடர்ந்து , நாளை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

04:22 PM (IST) Jul 18

கள்ளக்குறிச்சி கலவரம்- கைதுசெய்யப்பட்ட 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்..

கள்ளக்குறிச்சி பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ள நிலையில்,கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேர் கள்ளக்குறிச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வன்முறையை தூண்டுதல், பொதுசொத்துகளை சேதப்படுத்துதல், காயம் ஏற்படுத்துதல், கூட்டு சதி, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

04:04 PM (IST) Jul 18

கல்லூரி மாணவர் திடீர் மரணம்...! ஆன்லைன் மூலம் போதை மருந்து விற்ற கும்பலை தட்டி தூக்கிய போலீஸ்

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து ஆன்லைன் மூலம் போதை மருந்துகளை விநியோகம் செய்த நபரை மதுக்கரை தனிப்படை போலீஸார் கும்பகோணத்தில் வைத்து கைது செய்தனர். 
மேலும் படிக்க...

03:53 PM (IST) Jul 18

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் ; சம்பவ இடத்தில் அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு!

கள்ளக்குறிச்சி அருகேயுள்ள தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் பள்ளி வாகனங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. ஏராளாமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாணவி தங்கி இருந்த விடுதி மற்றும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூடப்படும் இடம் ஆகிவற்றை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ வேலு பார்வையிட்டார்.

03:52 PM (IST) Jul 18

கலவரத்துக்குள்ளான பள்ளியில் தொடரும் மரணங்கள்..? அன்றே ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட்.. வைரலாகும் நோட்டீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் தொடர் மரணங்கள் நிகழ்வதாக கூறி கண்டனம் தெரிவித்து, பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 2005 ஆம் ஆண்டிலே ஆர்பாட்டம் நடத்தியுள்ளது.  இதுக்குறித்தான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு நோட்டீஸ் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி  பரவி வருகிறதுமேலும் படிக்க

03:40 PM (IST) Jul 18

யானை-யை தொடர்ந்து ஏ.எல் விஜயுடன் கைகோர்க்கும் அருண் விஜய்!

புதிய தகவலின்படி நடிகர் அருண் விஜய் யானை படத்தை தொடர்ந்து ஏ.எல் விஜயின் புதிய திட்டத்தில் இணைந்துள்ளதாக தெரிகிறது..

மேலும் படிக்க..யானை-யை தொடர்ந்து ஏ.எல் விஜயுடன் கைகோர்க்கும் அருண் விஜய்!

03:38 PM (IST) Jul 18

ராம் நாத் கோவிந்த் எவ்வழியோ முர்முவும் அவ்வழியே.. பழங்குடிகளுக்கு ஒரு நன்மையும் ஏற்படாது... ரவிக்குமார் MP.

திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றால் பழங்குடியினருக்கு ஒரு நன்மையும் ஏற்படாது என்றும், அவர் பாஜக என்ற எஜமானருக்கு விசுவாசமாகவே நடந்து கொள்வார் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்திற்காக அவர் கொடுத்த பேட்டியின் விவரம் பின்வருமாறுமேலும் படிக்க

 
 

03:15 PM (IST) Jul 18

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக  சிபிசிஐடி விசாரணையை தொடங்கியது, விழுப்புரம் சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவில், திருவண்ணாமலை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக இடம்பெற்றுள்ளார்

02:29 PM (IST) Jul 18

கள்ளக்குறிச்சி வன்முறை ; தமிழக அரசு மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டிய இபிஎஸ்

உளவுதுறையின் தோல்வியே கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

02:17 PM (IST) Jul 18

இந்நாளில் மறைந்த கவிஞர் வாலி... எழுத்துக்களால் சிகரம் படைத்தவரின் வெற்றி வரிகள் !

ஏ ஆர் ரகுமான் வாலி இருவரும் அடிக்கடி ஒன்றாக பணிபுரிந்துள்ளனர். இவர்களின் சங்கமம் ரசிகர்களின் சிறந்த ஒன்றாக இருந்துள்ளது.  இவர்களின் கிளாசிக் பாடல்களை பார்ப்போம்..

மேலும் படிக்க..இந்நாளில் மறைந்த கவிஞர் வாலி... எழுத்துக்களால் சிகரம் படைத்தவரின் வெற்றி வரிகள் !

01:49 PM (IST) Jul 18

தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை.. இன்று 9 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானிலை அப்டேட்

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

01:48 PM (IST) Jul 18

இந்து கோயில் வருமானத்தை தான் அரசு புடுங்கி தின்னுது... இனிமே இந்த தப்பு பண்ண மாட்டேங்க... பல்டி அடித்த திமுக

இந்து கோவில் வருமானங்களை அரசு  பிடுங்கிக் கொள்கிறது அப்படி இருக்கும்போது ஒரு அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூஜை செய்வதில் என்ன தவறு இருக்கிறது என இந்து முன்னணி கட்சி பிரமுகர் எழுப்பிய கேள்விக்கு இனி இப்படி தவறு செய்யமாட்டேன் என திமுக எம்பி செந்தில்குமார் பின் வாங்கி உள்ளார். இதற்கான ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க

01:45 PM (IST) Jul 18

பணவீக்கத்தால் ஏற்பட்ட உச்சகட்ட அவலம்! மாட்டு சாணத்தை நாப்கினாக பயன்படுத்தும் பெண்கள்! அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வே நாட்டில், உள்ள கிராமப்புற இளம் பெண்கள்... பணவீக்கம் காரணமாக, சானிட்டரி நாப்கின் கூட வாங்க முடியாமல் மாட்டு சாணம் மற்றும் பழைய கந்தல் துணிகள், சேறு, போன்றவற்றை பயன்படுத்த நேரிடுவதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது கேட்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் படிக்க...
 

01:34 PM (IST) Jul 18

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாரா...? விசாரணை நடத்த வேல்முருகன் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் மகன்கள்  பள்ளி விடுதியில் தங்கி இருக்கக்கூடிய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேலுமுருகன் குற்றம் சாட்டினார்
 

மேலும் படிக்க...

 

01:15 PM (IST) Jul 18

மாணவி தற்கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒருத்தரையும் விடாதீங்க.. சசிகலா ஆவேசம்

தமிழக அரசு ஒரு வெளிப்படையான விசாரணையை விரைந்து மேற்கொண்டு, மாணவியின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் தப்பித்து விடாமல் அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்று தரவேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க;-

01:09 PM (IST) Jul 18

கொரோனா மற்றும் செல்ல பிராணியுடன் போராடும் வரலட்சுமி சரத்குமார்...வீடியோ இதோ!

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனது செல்லப் பிராணியுடன் என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் ஏறி குதித்தும் இறங்கியும், கேமராவை எட்டிப் பார்த்துமாய் விழி பிதுங்கி நிற்கிறார் அந்த வீடியோவுடன் நான் கோவித்தை டீலிங் செய்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க...கொரோனா மற்றும் செல்ல பிராணியுடன் போராடும் வரலட்சுமி சரத்குமார்...வீடியோ இதோ!

01:05 PM (IST) Jul 18

கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்ன..? - நீதிபதி கேள்வி

கள்ளக்குறிச்சி கலவரத்தால் கிடைத்த நீதி என்னவென்று கரூர் குற்றவியல் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். உண்மை என்ன என தெரியாமல் எதற்காக போராட்டம் என்றும் இளைய சமுதாயம் எதை நோக்கி செல்கிறது என்றும் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் எதை வேண்டுமானாலும் பதிவிடலாமா என்றும் கரூர் குற்றவியல் நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். போராட்டத்திற்கு ஆதரவாக வாட்சப் மூலம் அழைப்பு விடுத்ததாக கைதான 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.மேலும் படிக்க
 

01:01 PM (IST) Jul 18

சூர்யாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் கூடாது

ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா  உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க கூடாது. குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.மேலும் படிக்க

12:48 PM (IST) Jul 18

வகுப்பறைகள் பயன்படுத்தும் நிலையில் இல்லை

கள்ளக்குறிச்சியில் கலவரம் நடைபெற்ற தனியார் பள்ளியின் வகுப்பறைகள் பயன்படுத்தும் நிலையில் இல்லை. கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஆய்வு முடிவில் தகவல் தெரிவித்துள்ளார்.

12:47 PM (IST) Jul 18

கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு பிள்ளைகளையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக நினைக்க வேண்டும் - முதல்வர்

கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு பிள்ளைகளையும் தங்கள் சொந்த பிள்ளைகளாக நினைத்து பயிற்றுவிக்க வேண்டும். 
மாறாக நடக்கும் எந்த செயல்களாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என எச்சரித்தார். வன்முறை என்பது வளர்ச்சிக்கு எதிரானது என்பதை அவர்கள் உணர வேண்டும் அமைதியான தமிழகம் தான் அனைவருக்குமான தமிழகமாக அமையும் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.மேலும் படிக்க

12:27 PM (IST) Jul 18

திமுக அரசு இதை நிறுத்தாவிட்டால் !! நானே பெரிய போராட்டத்தை நடத்துவேன்.. ராமதாஸ் காட்டம்..

கேரளத்தில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது; கர்நாடகத்தில் மணல் அள்ள கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அந்த மாநிலங்களில் கட்டுமானப் பணிகள் தடைபடாமல் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.தமிழக அரசும் நினைத்தால் மணல் இறக்குமதியை அதிகரிப்பது, செயற்கை மணல் உற்பத்தி ஆகியவற்றின் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்யலாம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க

12:06 PM (IST) Jul 18

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவகுமாருக்கு சொந்தமான பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவகுமாருக்கு சொந்தமான பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 1,500 மாணவர்களை வெளியேற்றி வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். 

11:57 AM (IST) Jul 18

போதை ஏறி போச்சா? பார் செட்டப்பில்... செருப்பை கழட்டி போட்டுவிட்டு சொக்கி போய் அமர்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்

நடிகை ரம்யா பாண்டியன் (Ramya Pandian) அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் நிலையில், தற்போது பார் செட்டப்பில், செம்ம ஹாட்டாக கொடுத்த போஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க...
 

11:52 AM (IST) Jul 18

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை வழக்கு.. மறுபிரேத பரிசோதனை செய்யும் 3 அரசு மருத்துவர்கள் யார்?

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உடலை மறுபிரேத பரிசோதனை செய்யும் 3 அரசு மருத்துவர்கள் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. மருத்துவர் கீதாஞ்சலி(விழுப்புரம்), கோகுலநாததன்(சேலம்), ஜூலியானா ஜெயந்தி (திருச்சி) ஆகியோர் குழுவில் உள்ளனர். 

11:36 AM (IST) Jul 18

வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுவிட்டால் காவல்துறை வேலை முடிந்ததாக நினைக்க வேண்டாம் - நீதிபதி

வன்முறை கட்டுப்படுத்தப்பட்டுவிட்டால் காவல்துறை வேலை முடிந்ததாக நினைக்க வேண்டாம்; கலவரத்திற்கு யார் காரணம் என்பதை புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக உளவுத்துறை அறிக்கை என்ன சொல்கிறது என்றும்  சிலர் மட்டுமே இந்த வன்முறைக்கு காரணமில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். டிராக்டரால் பேருந்தை மோதியது தான் மொத்த வன்முறைக்கும் காரணம் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

11:23 AM (IST) Jul 18

கள்ளக்குறிச்சி சம்பவம்-தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11:22 AM (IST) Jul 18

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம்.. டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்து சிறப்புப்படை அமைத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

11:07 AM (IST) Jul 18

உயிரிழந்த மாணவியின் உடலை மறு உடல் கூராய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி

பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு உடல் கூராய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் மாணவியின் தந்தை தனது வழக்கறிஞருடன் உடல் மறுகூராய்வின் போது உடன் இருக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.மேலும் கள்ளிக்குறிச்சியில் வன்முறையில் ஈடுபட்ட வன்முறையாளர்களை கண்டறிய தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறப்புபடை அமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க