Asianet News TamilAsianet News Tamil

இந்து கோயில் வருமானத்தை இந்த அரசு எடுத்துக்குதுங்க.. இனிமே இந்த தப்பு பண்ண மாட்டேங்க... பல்டி அடித்த திமுக MP

இந்து கோவில் வருமானங்களை அரசு  பிடுங்கிக் கொள்கிறது அப்படி இருக்கும்போது ஒரு அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூஜை செய்வதில் என்ன தவறு இருக்கிறது என இந்து முன்னணி கட்சி பிரமுகர் எழுப்பிய கேள்விக்கு இனி இப்படி தவறு செய்யமாட்டேன் 

I Will not do this mistake again " dmk mp senthilkumar revock hes openion on hindu formalities.
Author
Dharmapuri, First Published Jul 18, 2022, 1:44 PM IST

இந்து கோவில் வருமானங்களை அரசு  பிடுங்கிக் கொள்கிறது அப்படி இருக்கும்போது ஒரு அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூஜை செய்வதில் என்ன தவறு இருக்கிறது என இந்து முன்னணி கட்சி பிரமுகர் எழுப்பிய கேள்விக்கு இனி இப்படி தவறு செய்யமாட்டேன் என திமுக எம்பி செந்தில்குமார் பின் வாங்கி உள்ளார். இதற்கான ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது, அதே நேரத்தில் பாஜக- அதிமுக அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகின்றன. குறிப்பாக பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் திமுக இந்துக்களுக்கு எதிராகவும்,  இந்து மதத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த தாராபுரம் ஏரியல் நடந்த அரசு விழாவில் இந்து முறைப்படி நடத்தப்பட்ட பூஜை நிகழ்ச்சிக்கு அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அது சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் தற்போது தன் செயலுக்கு அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். 

I Will not do this mistake again " dmk mp senthilkumar revock hes openion on hindu formalities.

முழு விவரம் பின்வருமாறு:- தர்மபுரி மாவட்டம் ஆலங்குளம் ஏரியில் 1.38 லட்சம் மதிப்பில் ஏரி புனரமைக்கும் பணி நடைபெற உள்ளது, இப்பணியில் துவக்கவிழாவில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள்  பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அப்போது ஒரு புரோகிதரை வரவழைத்து இந்து முறைப்படி சாங்கியம் செய்யப்பட்டது. இதை கண்டு கொதிப்படைந்த  நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தற்போது தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி, இது இந்து மாடல் ஆட்சி அல்ல, அரசு விழாவில் இதுபோல மத சம்பிரதாயங்கள் செய்யக் கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா என அதிகாரிகளிடம் ஆவேசம் அடைந்தார்.

இதையும் படியுங்கள்:  கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டாரா...? விசாரணை நடத்த வேல்முருகன் வலியுறுத்தல்

இது போன்ற மத அடையாளத்துடன் அரசு நிகழ்ச்சிகள் செய்யலாம் என எந்த இடத்திலும் விதிமுறைகள் இல்லை, அப்படி இருக்க நீங்கள் ஏற் இப்படி செயல்படுகிறீர்கள். நீங்கள் இப்படி ஒரு மதத்தை மட்டும் வைத்து வழிபாடு செய்தால் மற்ற இரு மதங்கள் எங்கே, கிறிஸ்தவ மதத்தையும் இசுலாமிய மதத்தையும் ஏன் அழைக்கவில்லை கிறிஸ்தவ மதத்தையும், இஸ்லாமிய மாதத்தையும் இங்கு அழைத்திருக்கவேண்டுமே, ஏன் இந்து மதத்தை மட்டும் அழைத்தீர்கள் என அவர் நிகழ்சிக்கு ஏற்பாடு செய்த  அதிகாரியை சரமாரியாக  கேள்வி எழுப்பு திக்குமுக்காட வைத்தார். அப்போது அந்த அதிகாரி எம்.பியிடம் மன்னிப்பு கோரினார்.

இதையும் படியுங்கள்:  பள்ளி மாணவி மர்ம மரணம்.. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுவர்.. முதலமைச்சர் உறுதி

பின்னர் அங்கு பூஜைக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளுப் அகற்றப்பட்டது. மத நல்லிணக்கம் குறித்து எம்.பி செந்தில்குமார் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் பல இந்து அமைப்பினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில் இந்து முன்னணியின் நீலகிரி மாவட்ட செயலாளர் குட்டி என்பவர் செந்தில்குமார் எம். பியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, சில கேள்விகளை முன்வைத்துள்ளார். அவரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய  எம்பி, இப்போது புரிந்து கொண்டேன் இனிமேல் இப்படி நடக்காது என அவரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். அந்த ஆடியோவில் கூறியிருப்பதாவது:- 

I Will not do this mistake again " dmk mp senthilkumar revock hes openion on hindu formalities.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்த உங்களுக்கு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வதில் தவறு இல்லை, அறநிலைத்துறை என்ற ஒரு துறை உள்ளது, அந்த துறையில் வரும் வருமானம் முழுவதையும் அரசு தின்கிறது, அதுபோல கோயில்களை அரசா கட்டியது, இல்லை நமது முன்னோர்கள் கட்டிய கோவில், இந்த கோவில் வருமானத்தை அரசு எடுத்துக்கொள்கிறது, ஆனால் மசூதியில் அல்லது  கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து வருகிற வருமானத்தை அரசு எடுப்பதில்லையே என அவர் கேள்வி எடுப்பினார்.

இதற்கு மாற்றுக் கருத்த பேசாத எம்பி செந்தில்குமார், எனக்கு கோவிலுக்குப் போகும் பழக்கம் இல்லை, ஆனால் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி தான் முன்பு தெரிவித்த கருத்தில் இருந்து பின் வாங்கியுள்ளார். இதற்கான ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios