பணவீக்கத்தால் ஏற்பட்ட உச்சகட்ட அவலம்! மாட்டு சாணத்தை நாப்கினாக பயன்படுத்தும் பெண்கள்! அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வே நாட்டில், உள்ள கிராமப்புற இளம் பெண்கள்... பணவீக்கம் காரணமாக, சானிட்டரி நாப்கின் கூட வாங்க முடியாமல் மாட்டு சாணம் மற்றும் பழைய கந்தல் துணிகள், சேறு, போன்றவற்றை பயன்படுத்த நேரிடுவதாக பிரபல செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது கேட்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இது குறித்து ஜிம்பாப்வே நாட்டின் கிராமப்புற பெண்கள் பேசும் வீடியோக்களும் வெளியாக துவங்கியுள்ளது.
 

Zimbabwe young girls are used to cow dung for sanitary pads

ஜிம்பாப்வே கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் பலர் பணவீக்கத்தின் காரணமாக சுகாதாரப் பொருட்களை கூட வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதற்க்கு மாற்றாக மாட்டு சாணம் போன்றவற்றை இவர்கள் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த இயற்கை மாதாந்திர சுழற்சி தங்களின் அவமானகரமான காலமாக மாறியுள்ளது என அந்நாட்டு பெண்கள் மனம் நொந்து கூறுகிறார்கள். இந்த நாட்களை எதிர்கொள்ளவும், மாதவிடாய் நாட்களில் வரும் ரத்த கசிவை தடுக்கவும், தங்களுக்கு எளிதாக பணம் இல்லாமல் கிடைக்க கூடிய பொருட்களான, மாட்டுச் சாணம், இலை, தழைகள், செய்தித்தாள்கள், சேறு மற்றும் பழைய கந்தல் துணிகளை பயன்படுத்துவதாக கூறுகிறார்கள்.

Zimbabwe young girls are used to cow dung for sanitary pads

மேலும் செய்திகள்: போதை ஏறி போச்சா? பார் செட்டப்பில்... செருப்பை கழட்டி போட்டுவிட்டு சொக்கி போய் அமர்ந்திருக்கும் ரம்யா பாண்டியன்
 

இவர்களில் மாட்டு சாணத்தை தான் அதிக படியான பெண்கள் பயன்படுத்துவதாகவும், இதுவே அதிக படியான உதிர போக்கை உரிச்சுவதாக கூறுகிறார்கள். இவர்கள் மாட்டு சாணத்தை, முதலில் நன்கு உலரவிட்டு, பின்னர் அதனை பக்குவப்படுத்தி... பல துணிகளை அதன் மேல் சுற்றி, நாப்கின் போல் தயார் செய்து உபயோகிக்கிறார்கள். இது சாதாரண துணியை விட, அதீத ரத்த போக்கை உருசுவதாகவும், இதனால் தங்களுடைய வேலைகளை தொய்வில்லாமல் செய்யமுடிவதாக கூறுகிறார்கள். இப்படி சுகாதாரமற்ற முறைகளை ஜிம்பாப்வே கிராமப்புற பெண்கள் பயன்படுத்துவதால் சிலர் அரிப்பு போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

ஜிம்பாப்வேயில் உள்ள SNV நெதர்லாந்து மேம்பாட்டு அமைப்பின் ஆய்வின்படி, தலைநகர் ஹராரேவுக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் உள்ள கிராமப்புற நகரமான டோம் போஷாவாவில் உள்ள 72% பெண்கள் 2 அமெரிக்க டாலர்களுக்குச் சமமான ஊதியம் மட்டுமே பெற்று தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் பெண்களில் சுமார் 3 மில்லியன் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சானிட்டரி நாப்கின்களை வாங்க முடிவது இல்லை என கூறியுள்ளது.
 

Zimbabwe young girls are used to cow dung for sanitary pads

மேலும் செய்திகள்: மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகள் கேயா யார் தெரியுமா? அடேங்கப்பா இந்த துறையில் இவர் வல்லவராம்!

அதே போல், பெண்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் கூற்றுப்படி, 67% பெண்கள் மாதவிலக்குக் காலத்தில் பள்ளியைத் தவறவிடுகிறார்களாம், ஏனெனில் சுகாதாரப் பொருட்கள் மற்றும் சுத்தமான சுகாதார வசதிகள் இல்லாத காரணத்தால், பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாதவிடாய் நாட்களை சமாளிக்க இதுபோன்ற சுகாதாரமற்ற முறையை டோம் போஷாவா கிராமத்து பெண்கள் கையாளுவதால், அவர்கள் வாழும் இடங்களில் பாக்ட்டீரியாவின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது சுகாதாரத்துறை.

அதே போல் பெண்கள் பலர்  தங்களின் அந்தரங்க பகுதிகளில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள். இப்படி ஏற்படும் பெண்களை மருத்துவமனைகளில் பரிசோதிக்கும்போது, ​​ஈஸ்ட் தொற்றுகள், யூரோஜெனிட்டல் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் உள்ளதாக கூறப்படுகிறது.  எனவே இவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கொண்டுவரும் விதமாக தற்போது பொது சேவை, தொழிலாளர் மற்றும் சமூக நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சமூக குழந்தை பராமரிப்பு பணியாளர், பலமுறை பயன்படுத்த கூடிய பேடுகளை அந்த கிராமத்து பெண்களுக்கு கற்றுக்கொடுக்கும் முயற்ச்சியை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Zimbabwe young girls are used to cow dung for sanitary pads

மேலும் செய்திகள்:கொளுத்து வேலை செய்யும் கிராமத்து கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் முல்லை! பஞ்சுமிட்டாய் நிற தாவணியில் பளீச் போஸ்
 

மேலும் ஜிம்பாப்வே அரசாங்கம், அனைத்து சுகாதாரப் பொருட்களுக்கும் வரிகளை அகற்றுவதன் மூலம் இந்த நிலைமையை எளிதாக சமாளிக்க முடியும். ஆனால் ஜிம்பாப்வே தேசிய புள்ளியியல் ஏஜென்சியின் படி, பணவீக்கம் 191.6% க்கும் அதிகமாக இருப்பதால் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போதைக்கு நாப்கின் விலைகளில் சரிவு ஏற்பட சாத்தியம் இல்லை என்றாலும், பொது சேவை, தொழிலாளர் மற்றும் சமூக நல அமைச்சகத்தின் கீழ் உள்ள சமூக குழந்தை பராமரிப்பு பணியாளர்கள் முயற்சியில் விரைவில் இதற்க்கு ஒரு தீர்வு எட்டப்படும் என நம்புகின்றனர் டோம் போஷாவா கிராமத்து பெண்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios