- Home
- Cinema
- மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகள் கேயா யார் தெரியுமா? அடேங்கப்பா இந்த துறையில் இவர் வல்லவராம்!
மறைந்த நடிகர் பிரதாப் போத்தனின் மகள் கேயா யார் தெரியுமா? அடேங்கப்பா இந்த துறையில் இவர் வல்லவராம்!
மூத்த நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் உடல்நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில், இவருடைய மகள் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே, உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த, பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் நேற்று காலை காலை 8 மணியளவில் உயிரிழந்த சமபவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் சென்று தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வந்தனர்.
மேலும் செய்திகள்: கொளுத்து வேலை செய்யும் கிராமத்து கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் முல்லை! பஞ்சுமிட்டாய் நிற தாவணியில் பளீச் போஸ்
குறிப்பாக, நடிகர் கார்த்தி, கமல்ஹாசன், பிரபு, இயக்குனர்கள் மணிரத்னம், சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராம், ராஜிவ் மேனன், நடிகை கனிகா ஆகியோர் பிரதாப் போத்தன் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அதே போல் மூத்த நடிகரும், இவரின் நண்பருமான சத்யராஜ் இன்று அஞ்சலி செலுத்தினார், மேலும் நடிகை ரேவதி, நடிகர் சின்னி ஜெயந்த்,இயக்குனர் வெற்றிமாறன் போன்ற பல திரை பிரபலங்கள் இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இவரது உடல் வேலங்காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகள்: உலக அளவில் மாஸ் காட்டும் தனுஷின் 'ரவுடி பேபி' பாடல்..! துள்ளி குதித்து கொண்டாடும் ரசிகர்கள்..!
இவருடைய மரணத்திற்கு பின்னர், இவரை பற்றியும்... இவரது வாழ்க்கை, குடும்பம் போன்றவற்றை பற்றியும் தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது பிரதாப் போத்தனின் 31 வயது மகள் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுளளது. மேலும் அவரது புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: கடற்கரையில் தாவணியை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா! ஹாட் போட்டோஸ்
பிரதாப் போத்தனின் மகள் கேயா தன்னுடைய தந்தையை போலவே கலைத்துறையை தேர்வு செய்து அதில் தான் பணியாற்றி வருகிறார்.
இசைத் துறையில் ஆர்வம் மிக்கவரான கேயா, பல பாடல்களை எழுதி பாடியுள்ளதோடு ஒரு இசைக்குழுவையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: சிம்பு நடித்தால் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க முடியாது... கண்டீஷன் போட்ட 3 பிரபலங்கள்! விலகிய STR!
மேலும் கேயா தன்னுடைய தந்தையுடன் இருக்கும் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.