கொளுத்து வேலை செய்யும் கிராமத்து கிளியாக மாறிய பாண்டியன் ஸ்டோர் முல்லை! பஞ்சுமிட்டாய் நிற தாவணியில் பளீச் போஸ்
'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் நாயகிகளில் ஒருவரான காவியா, தற்போது கொளுத்து வேலை செய்யும் கிராமத்து கிளியாக மாறி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியலில், சித்ராவின் மறைவிற்கு பின்னர் புதிய முல்லையாக நடித்து வருபவர், 'பாரதி கண்ணம்மா' சீரியலில் சிறிய ரோலில் நடித்து வந்த காவியா.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அணைத்து சீரியல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், குடும்பத்தையும், அண்ணன் தம்பி பாசத்தையும் மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியலான 'பாண்டியன் ஸ்டோருக்கு' வேற லெவல் ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
மேலும் செய்திகள்: உலக அளவில் மாஸ் காட்டும் தனுஷின் 'ரவுடி பேபி' பாடல்..! துள்ளி குதித்து கொண்டாடும் ரசிகர்கள்..!
முன்பு இருந்த பாச பிணைப்பு தற்போது சீரியலில் குறைந்தாலும், எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வந்து சீரியலை நாளுக்கு நாள் சுவாரஸ்யப்படுத்தி காட்டுகிறார் இயக்குனர்.
இந்த சீரியலில் புதிய முல்லையாக நடித்து வரும் காவியா தற்போது சில திரைப்படங்களில் நடிக்க துவங்கிவிட்டார்.
மேலும் செய்திகள்: கடற்கரையில் தாவணியை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சி ட்ரீட் வைத்த தர்ஷா குப்தா! ஹாட் போட்டோஸ்
எனினும் அவ்வப்போது மிகவும் வித்தியாசமான கெட்டப்பில், போஸ் கொடுத்து... ரசிகர்கள் மனதை மயக்கி வரும் இவர் யாரும் எதிர்பார்க்காத கெட்டப்புக்கு மாறியுள்ளார்.
செங்கல் பக்கத்தில், தலையில் பாண்டு வைத்து கொண்டு கொளுத்து வேலை செய்யும் பெண்ணாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் காவியா.
மேலும் செய்திகள்: சிம்பு நடித்தால் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க முடியாது... கண்டீஷன் போட்ட 3 பிரபலங்கள்! விலகிய STR!
மேலும் குடிசை வீடு பக்கத்தில் நின்றபடி பளீச் என இருக்கும் பஞ்சு மிட்டாய் நிற தாவணியில்... கிராமத்து கிளியாகவே மாறி இவர் கொடுத்துள்ள போசுகள் பார்ப்பவர்களை வியப்படைய செய்துள்ளது.
அதே போல் தான் அணிந்திருக்கும் பாவாடை தாவணிக்கு ஏற்ப, கழுத்தில் கருப்பு நிற கருக மணி, தலையில் மல்லி பூ... காதல் ஜிமிக்கி போன்றவற்றை அணிந்து தன்னுடைய புன்னகையால் மேலும் அழகாக ஜொலிக்கிறார்.
மேலும் செய்திகள்: ரக்சன் - ராஜலட்சுமியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 3 முக்கிய பிரபலங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்..!
இவரது இந்த கிராமத்து, கெட்டப் கியூட் போட்டோஸ்... சமூக வலைத்தளத்தில் நெட்டிசங்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.