சிம்பு நடித்தால் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க முடியாது... கண்டீஷன் போட்ட 3 பிரபலங்கள்! விலகிய STR!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள, 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் மாதம், வெளியாக உள்ள நிலையில்... இந்த படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் சிம்பு இந்த படத்தில் நடித்தால், நடிக்க மாட்டோம் என சில பிரபலங்கள் கூறியதாக கூறப்படுகிறது.
நடிகர் சிம்பு குறித்து, ஆரம்ப காலத்தில் இருந்தே பல சர்ச்சைகள் எழுந்தது உண்டு. குறிப்பாக இவர் ஷூட்டிங்கிற்கு நேரத்திற்கு வர மாட்டார், டைம் கீப் அப் பண்ண மாட்டார் என சொன்னவர்கள் பலர்.
ஆனால் அதையே மாற்றி காட்டியவர் என்றால் இயக்குனர் மணிரத்னம் தான். 'மணிரத்னம்' இயக்கத்தில், சிம்பு நடித்த 'செக்க சிவந்த வானம்' படத்தில் நடித்த போது, சிம்புவை மணிரத்னமே வந்து ஷூட்டிங்கிற்கு அழைத்து சென்றதாக கூறப்பட்டது.
மேலும் செய்திகள்: ரக்சன் - ராஜலட்சுமியை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்து கொள்ளும் 3 முக்கிய பிரபலங்கள்? லேட்டஸ்ட் அப்டேட்..!
சிம்புவும் காலை 3 மணியாக இருந்தாலும் அடித்து பிடித்து கொண்டு, ஷூட்டிங் கிளம்பி சரியான நேரத்திற்கு சென்று விடுவார். மேலும் சிம்புவுக்கு மணிரத்தினம் மீது மிகப்பெரிய மரியாதை உண்டு.
சிம்பு 'செக்க சிவந்த வானம்' படத்தை தொடர்ந்து, மீண்டும் மணிரத்னத்தின் இயக்கத்தில் இணைந்து நடிக்க இருந்த மற்றொரு திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் கதையை சிம்புவிடம் கூறி மணிரத்தினம் சம்மதமும் வாங்கி வைத்திருந்தார்.
மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன்' படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்படுகிறது.. விக்ரம், மணிரத்னத்துக்கு வக்கீல் நோட்டீஸ்!
அப்போதைக்கு இந்த படத்தில், நயத்தரவும் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. சிம்பு நடித்தால் இந்த படத்தில் இருந்து நயன்தாரா வெளியேறிவிடுவேன் என கூறியுள்ளார். இவரை தொடர்ந்து, தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இரண்டு நடிகர்களும் வெளியேறிவிடுவேன் என கூறியுள்ளனர்.
இந்த தகவலை, மணிரத்னம் தயங்கியபடி சிம்புவிடம் கூற... நிலைமையை புரிந்து கொண்டு, தனக்காக யாரும் படத்தை விட்டு விலக வேண்டாம், நானே விலகி விடுகிறேன் என கூறி பெருந்தன்மையோடு விலகியுள்ளார் என கூறப்படுகிறது.