Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்கிறது... 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு கூடுதல் மின் கட்டணம்!!

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 

electricity charges in tamilnadu increases says senthil balaji
Author
Tamilnadu, First Published Jul 18, 2022, 7:55 PM IST

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும். 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி சிசிடிவி வீடியோ உண்மை இல்லை.! இதுலயும் லேட்டா ? காவல்துறையை வறுத்தெடுக்கும் மக்கள்

மாதம் 301 - 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம். கேஸ் இணைப்பை போல, 100 யூனிட் இலவச மின்சாரத்தை நுகர்வோர் வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் புதிய திட்டம் அறிமுகம்.

இதையும் படிங்க: தேவையில்லாத வேலை..நேரம் பார்த்துதான் பதவி ஏத்துக்குறாங்க.. தருமபுரி செந்திலை டரியல் ஆக்கிய கார்த்தி சிதம்பரம்

ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என கொண்டு வர திட்டம். குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ரயில்வே மற்றும் கல்விநிறுவனங்களுக்கு யூனிட்டிற்கு 65 காசுகள் உயரும் என்றும் அமைச்சர் சொந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios