இலங்கையில் விவசாயிகள் கடன் ரத்து... அறிவித்தார் அந்நாட்டு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க!!
இலங்கையில் விவசாயிகள் கடன்களை ரத்து செய்வதாக அந்நாட்டின் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
இலங்கையில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்து அந்நாட்டு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இலங்கையி்ல் அதிபர் கோட்டபய ராஜபக்சே ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடும் நெருக்கடியை சந்தித்தது. உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்க முடியாத அளவிற்கு விலைவாசிகள் உயர்ந்தன. இதனால் கோபமடைந்த மக்கள், ராஜ பக்ச குடும்பத்தாரை அரசியலைவிட்டே விரட்ட போராட்டத்தில் ஈடுபட்டனட். இந்த போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் பதவி விலகினார். ஆனால், அதிபராக இருந்த கோட்டபய ராஜபக்ச மக்கள் போராட்டத்துக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறினார்.
இதையும் படிங்க: கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூரும் டாட்டா காட்டியது; இந்தியாவுக்கு வருகிறாரா?
பின்னர் அவரும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதை அடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இலங்கையில் அவசரநிலையை அறிவித்து, இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசங்கே உத்தரவிட்டுள்ளார். புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இருந்து வருகிறார். இலங்கையில் அடுத்த அதிபா் பதவிக்கு இடைக்கால அதிபா் ரணில் விக்கிரமசிங்க உள்பட 4 போ் போட்டியிடுகிறாா்கள்.
இதையும் படிங்க: இலங்கையின் அரசியல் நிலைத்தன்மை அங்கிருந்தே மீள வேண்டும். மற்ற நாடுகளிடம் இருந்து அல்ல!
இந்த நிலையில் இலங்கையில் விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதாக இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசங்க அறிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், இலங்கையில் 2 ஏக்கருக்கும் குறைவான நிலத்திற்கு பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று அறிவித்தார். மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்து கட்சி ஆட்சியை அமைக்கலாம் எனவும் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.