Asianet News TamilAsianet News Tamil

கோத்தபய ராஜபக்சேவுக்கு சிங்கப்பூரும் டாட்டா காட்டியது; இந்தியாவுக்கு வருகிறாரா?

சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்து இருக்கும் இலங்கையின்  முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே 15 நாட்களுக்கு மேல் அந்த நாட்டில் தங்கக் கூடாது என்று  அந்த நாடு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Gotabaya Rajapaksa told to leave Singapore within 15 days says sources
Author
First Published Jul 18, 2022, 4:54 PM IST

இலங்கையின் அதிபராக இருந்த 73 வயது கோத்தபய ராஜபக்சே கடந்த வாரம் நாட்டில் இருந்து  தப்பி மனைவியுடன் மாலத்தீவு சென்றார். அங்கும் அவருக்கு எதிர்ப்பு அதிகரிக்க அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் தங்குவதற்கு 15 நாட்கள் மட்டுமே அனுமதி அளித்து இருப்பதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூருக்கு கோத்தபய ராஜபக்சே சென்ற பின்னர், அந்த நாட்டு அரசாங்கம் விளக்கம் அளித்து இருந்தது. அதாவது, சிங்கப்பூரில் தங்குவதற்கு கோத்தபய ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை என்றும், யாருக்கும் அடைக்கலம் கொடுப்பதில்லை என்றும் விளக்கம் அளித்து இருந்தது. இந்த நிலையில், சிங்ககப்பூரில் இருந்து கோத்தபய ராஜபக்சே, துபாய்க்கு செல்லலாம் என்று கூறப்பட்டது.

sri lanka economic crisis: இலங்கை அதிபர் தேர்தல்: மீண்டும் அவசரநிலை அறிவிப்பு

இதற்கிடையே, இந்தியாவில் தஞ்சம் அடைவதற்கு அவர் மத்திய அரசாங்கத்தை அணுகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், ஏற்கனவே இதுகுறித்த கேள்வியை மத்திய அரசாங்கம் மறுத்துள்ளது. இந்தியாவில் தங்குவதற்கு அவர் அணுகவில்லை என்றும், அனுமதியும் அளிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்து இருந்தது.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜபக்சே குடும்பத்தினர்தான் இலங்கையை ஆட்சி செய்து வருகின்றனர். அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்தபோதுதான், இலங்கையில் இனப்படுகொலை முடிவுக்கு வந்தது. அப்போது லட்சக்கணக்கில் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டு இருந்தனர். இதுதொடர்பான வழக்கு இன்னும் அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

crisis in sri lanka : இலங்கை மக்கள் நிம்மதிபெருமூச்சு, மகிழ்ச்சி: கடந்த 6 மாதத்தில் முதல்முறையாக அறிவிப்பு

தற்போது கடுமையான பொருளாதார சீரழிக்கு காரணமான ராஜபக்சே குடும்பத்தின் மீது அந்த நாட்டு மக்களுக்கு கோபம் கொந்தளித்துள்ளது.

அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடிய நிலையில் அவரது சகோதரர்கள் மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே நாட்டை விட்டு போகக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

வரும் 20 ஆம் தேதி முறையாக புதிய அதிபர் தேர்வு செய்யப்பட இருக்கிறார். தற்போது இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இருந்து வருகிறார். அதிபர் ராஜினாமா செய்த 30 நாட்களுக்குள் அடுத்த பிரதமரை தேர்வு செய்ய வேண்டும். கடந்த 13ஆம் தேதி கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்து இருந்தார். இதை அதிகாரபூர்வமாக 14ஆம் தேதி சபாநாயகர் அறிவித்து இருந்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios