விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும், சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு மற்றும் சங்கீதா கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபதத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே ரஞ்சிதமே, தளபதி ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வாரிசு திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

10:43 PM (IST) Dec 19
சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட சொர்க்கம் தான் சிங்கப்பூர். அழகிய நாடுகள் பல இருந்தாலும் தனித்துவமான இடங்களால் சிங்கப்பூர் இன்றளவும் சுற்றுலா பயணிகளால் விரும்பப்படுகிறது.
08:54 PM (IST) Dec 19
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்.
08:27 PM (IST) Dec 19
பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் (STIs) தொடர்புடைய அறிகுறிகளை நாம் கவனிக்க தவறிவிடுகிறோம்.
07:19 PM (IST) Dec 19
இலங்கையில் உள்ள சுற்றுலா அதிகாரசபையானது பண்டிகை காலம் வருவதால், கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் உள்ள போராட்ட தளத்தை பண்டிகைக்கான தளமாக மாற்றியுள்ளனர்.
05:42 PM (IST) Dec 19
உடலுறவுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு ப்ளேவர்களில் உள்ள ஆணுறைகள் பயன்படுத்துவதை ஏன் நிறுத்த வேண்டும் என்பது இங்கே பார்க்கலாம்.
05:42 PM (IST) Dec 19
உடலுறவுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு ப்ளேவர்களில் உள்ள ஆணுறைகள் பயன்படுத்துவதை ஏன் நிறுத்த வேண்டும் என்பது இங்கே பார்க்கலாம்.
05:02 PM (IST) Dec 19
ஒவ்வொரு மாணவர்களுக்கும் தேர்வுக்கு தயாராகும் போது மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. மன அழுத்தம் அதிகமாக இருந்தால் அது மாணவர்களின் தேர்வு பாதிக்கும் வாய்ப்புகளும் அதிகம். தேர்வு நேரங்களில் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பது எப்படி என்பதை இதில் காண்போம்.
03:59 PM (IST) Dec 19
பெண்கள் தன்னுடன் உடலுறவு கொள்வதை ரகசியமாக படம்பிடித்ததற்காக இளங்கலை பட்டதாரிக்கு தண்டனை வழங்கி உள்ளது நீதிமன்றம்.
03:40 PM (IST) Dec 19
நடிகர் நெப்போலியன் தனது மகன் பாதிக்கப்பட்டுள்ள அரியவகை நோய் குறித்தும். இதற்காக உலக தரத்தில் தான் கட்டிய மருத்துவமனை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருந்தார். மேலும் படிக்க
03:11 PM (IST) Dec 19
பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.
02:33 PM (IST) Dec 19
ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது அவரது வாட்ச் மற்றும் சட்டையின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
01:57 PM (IST) Dec 19
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாக்ஸிங் போட்டியை தொடங்கி வைக்க சென்றிருந்தார் ரோஜா. அப்போது சட்டென கிளவுஸை மாட்டிக்கொண்டு களத்தில் இறங்கி ஜாலியாக பாக்ஸிங் ஆடி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் படிக்க
12:25 PM (IST) Dec 19
கூட்டணி என்ற பெயரில் மௌனம் சாதித்து, தமிழகத்தின் இறையாண்மையை, நில வளத்தை பலி கொடுப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
11:55 AM (IST) Dec 19
பொங்கல் பரிசு தொகுப்பில் பொதுமக்களுக்கு என்ன வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
11:24 AM (IST) Dec 19
மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
11:23 AM (IST) Dec 19
பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் மறைந்த பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு வளைவை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகம் என பெயர் சூட்டப்பட்டது.
10:56 AM (IST) Dec 19
சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்துள்ளனர். உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
10:45 AM (IST) Dec 19
ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.133 கோடி வசூலித்து உள்ளது. இதில் விடுமுறை தினமான நேற்று மட்டும் இப்படம் ரூ.50 கோடியை வசூலித்து இருக்கிறது. மேலும் படிக்க
10:33 AM (IST) Dec 19
மணல் கொள்ளை நடப்பதாக சுவரொட்டி ஒட்டியர்கள் மீது மர்ம கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்சி சமூக வலைதளத்தில் பரவிய நிலையில், ஊராட்சி மன்ற தலைவரின் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் படிக்க..
10:12 AM (IST) Dec 19
அந்தமானுக்கு அருகே உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் ராமேஸ்வரம் மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்துள்ளது.
10:07 AM (IST) Dec 19
துணிவு படத்தில் இருந்து காசேதான் கடவுளடா என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இப்பாடலை வைஷாக் என்பவருடன் இணைந்து மஞ்சு வாரியரும் பாடி உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. மஞ்சு வாரியர் பாடியுள்ள முதல் தமிழ் பாடல் என்பதால், இது எப்படி இருக்கும் என ஆவலோடு கேட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் படிக்க
09:39 AM (IST) Dec 19
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது அர்ஜென்டினா அணி. மெஸ்ஸி தலைமையிலான இந்த அணியின் வெற்றியை இந்தியர்கள் தங்கள் நாட்டின் வெற்றிபோல் கொண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான சினிமா நட்சத்திரங்களும் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பு இதோ.
09:13 AM (IST) Dec 19
சென்னையில் அதிவேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐடி பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
08:41 AM (IST) Dec 19
ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்க, இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்படுவதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
08:40 AM (IST) Dec 19
அதிமுக என்னும் கம்பெனி 6 மாதத்திற்குள் மூடப்படும். அந்த கம்பெனி 4ஆக பிரிந்துள்ளது. யார் கூறியும் திமுகவில் இணையவில்லை. நானாகவேதான் இணைந்தேன். முந்தைய அதிமுக ஆட்சியில் நடைபெற்ற எல்.இ.டி பல்பு, கோவை குளங்கள், தூர்வாரும் பணி, குட்கா உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் அடுத்த வாரம் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் முதல்வரிடம் நேரில் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
08:11 AM (IST) Dec 19
அதிமுகவில் ஓபிஎஸ் அணியின் அமைப்பு செயலாளராக முன்னாள் எம்பி மைத்ரேயனை நியமனம் செய்து ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
07:08 AM (IST) Dec 19
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் ஃபிரான்ஸை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி உலக கோப்பையை வென்றது.
மேலும் படிக்க
07:08 AM (IST) Dec 19
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை ஃபைனலில் ஹாட்ரிக் கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாப்பே.
07:04 AM (IST) Dec 19
தஞ்சை அருகே எதிர்பாராத விதமாக இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.