MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சட்டை ரூ.2 லட்சம்... வாட்ச் ரூ.2 கோடி - ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வாரிசு நடிகர்

சட்டை ரூ.2 லட்சம்... வாட்ச் ரூ.2 கோடி - ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய வாரிசு நடிகர்

ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது அவரது வாட்ச் மற்றும் சட்டையின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 19 2022, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிரஞ்சீவி. இவரின் மகன் ராம்சரணும் தற்போது டோலிவுட்டில் முன்னணி ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தை ராஜமவுலி இயக்கி இருந்தார்.

25

இதையடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ஆர்.சி.15 என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

35

நடிகர் ராம்சரணுக்கு கடந்த 2012-ம் ஆண்டு உபாசனா என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடி, விரைவில் பெற்றோர் ஆக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் ராம்சரணின் மனைவி உபாசனா கர்ப்பமாகி உள்ளார். இதனால் இவர்களது குடும்பமே மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்... டபுள் சந்தோஷத்தில் ஐஸ்வர்யா ராய்... குடும்பத்தோடு குட் நியூஸ் சொன்ன அபிஷேக் பச்சன் - குவியும் வாழ்த்துக்கள்

45

ராம்சரண் ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது அவரது வாட்ச் மற்றும் சட்டையின் விலை விவரங்கள் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதன்படி ராம்சரண் தனது நண்பர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில் அவர் போட்டிருக்கும் வரிக்குதிரை டிசைன் சட்டையின் விலை கிட்டத்தட்ட ரூ.2 லட்சமாம்.

55

அதேபோல் நடிகர் ராம்சரண் வைத்திருக்கும் வாட்ச்சின் விலை கேட்டால் தலைசுற்றிவிடும். அவர் அணிந்திருக்கும் Richard Mille என்கிற பிராண்டட் வாட்ச்சின் விலை ரூ.2 கோடியாம். இதையறிந்த வாயடைத்துப் போன நெட்டிசன்கள், அவரிடம் வேறென்ன காஸ்ட்லி பொருட்கள் உள்ளது என்பதை வலைவீசி தேடத் தொடங்கி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ஹீரோ... பல இடங்களில் காயங்களுடன் வெளியான அதிர்ச்சி புகைப்படம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராம் சரண்

Latest Videos
Recommended Stories
Recommended image1
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Recommended image2
திறமையை விட 'ஃபாலோயர்ஸ்' தான் முக்கியமா? உண்மையை வெளிப்படையாக பகிர்ந்த நடிகர்!
Recommended image3
ஏன் சீரியஸ் கேரக்டர் பண்றதே இல்ல? முதன்முறையாக ரகசியத்தை உடைத்த சந்தானம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved