விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ஹீரோ... பல இடங்களில் காயங்களுடன் வெளியான அதிர்ச்சி புகைப்படம்!
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் ஹீரோ ஒருவர் விபத்தில் சிக்கி பல இடங்களில் காயங்களுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், அனைத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் மட்டும் இன்றி, இளம் ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று, 'முத்தழகு'. விதியில் வசத்தால், தன்னுடைய கிராமத்தை சேர்ந்த படிக்காத பெண்ணை இரண்டாவது திருமணம் கொள்ளும் நாயகன், அதே கிராமத்தை சேர்ந்த காதலியையும் திருமணம் ஏற்கனவே யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார். அதை அறியாத அவரின் அம்மா கொடுத்த வாய்ப்பை காப்பாற்ற வேறு வழியில்லாமல் இரண்டாவது திருமணம் செய்ய நேருகிறது.
காதலியையும் விட்டு கொடுக்க மனம் இல்லை... அம்மாவிற்காக திருமணம் செய்து கொண்ட முத்தழகையும் பிரிய மனம் இன்றி தவித்து வரும் நாயகன் யாருடன் சேர்ந்து வாழ்வார் ? என்கிற மிகப்பெரும் கேள்விக்கு மத்தியில் இந்த சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் ஷோபனா முத்தழகு என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இரண்டாவது ஹீரோயினாக வைஷாலி நடித்து வருகிறார். பூமிநாதன் என்கிற கதாபாத்திரத்தில், கதாநாயகனாக நடித்து வருபவர்... ஆஷிஷ் சக்கரவர்த்தி. இவர்களை சுற்றி தான் இந்த கதை மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
இவரு நம்ப லிஸ்டிலேயே இல்லையே? பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளரால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் ஆஷிஷ்.. அண்மையில் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். தற்போது இதுகுறித்த புகைப்படங்களை அவரே வெளியிட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியுடன்... விரைவில் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.