இவரு நம்ப லிஸ்டிலேயே இல்லையே? பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளரால் ரசிகர்கள் அதிர்ச்சி!
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ள போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது 60 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம், ராம் மற்றும் ஆயிஷா ஆகிய இருவர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது 11 போட்டியாளர்கள் நிலைத்து நின்று விளையாடி வருகிறார்கள்.
இவர்களில் இந்த வாரம் யார் வெளியேறுவர் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில், சற்று முன் யாரும் சற்றும் எதிர்பாராத போட்டியாளர் தான் இந்த வாரம் வெளியேறியுள்ளார்.
சின்னத்திரை நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன் அதிரடி கைது - பின்னணி என்ன?
நெட்டிசன்கள் கணிப்பின் படி இந்த வாரம், மணிகண்டன் அல்லது ஏடிகே ஆகிய இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம் யாரும் எதிர்பாராத போட்டியாளரான, ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என கூறப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 6 துவங்கிய போது, இலங்கை பெண்ணான இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி துவங்கி ரசிகர்கள் ஆதரித்தனர். மேலும் இவருடைய கியூட் ரியாக்ஷனுக்கும்... நடன அசைவுகளுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊ சொல்றியா, என் சாமி பாடல் இடம் பெற்ற புஷ்பா வெளியாகி ஓராண்டு நிறைவு: புஷ்பா மரமும் வளர்ந்துவிட்டது!
பிக்பாஸ் விதிமுறைகளில் மீறக்கூடாத விதிமுறைகளில் ஒன்றான, நாமினேட் செய்ய உள்ள போட்டியாளர் குறித்து, மற்றொரு போட்டியாளரிடம் விவாதிக்க கூடாது என்பது... ஆனால் இந்த விதிமுறையை ஜனனி மீறினார். ஷிவினை நாமினேட் செய்யப்போவதாக அமுதவாணனிடம் அவர் பேசியதை... நேற்று குறும்படமாக வெளியிட்டு, வெளுத்து வாங்கினார் கமல்.
விதியை மீறியதால் இந்த வாரம் ஜனனி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது குறைந்த வாக்குகளின் அடிப்படையிலும் ஜனனி தான் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு மாதத்திற்கு மேலாகவே ஜனனி சுவாரசியம் இல்லாமல் விளையாடி வந்தாலும், அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் இன்னும் விஜய் டிவி அவரை வெளியில் அனுப்பவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இந்த நிலையில், நெட்டிசன்களில் எலிமினேஷன் லிஸ்ட்ல் இடம்பிடிக்காத போட்டியாளரான ஜனனி அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை நெருங்க நெருங்க... நிகழ்ச்சி மீண்டும் கடுமையான டாஸ்குகள் மூலம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.