உன்னை மிஸ் செய்கிறேன்... மறைந்த மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பாடகி சித்ரா! நெஞ்சை உலுக்கும் பதிவு!
பிரபல பின்னணி பாடகி சித்ரா, மறைந்த அவருடைய மகளின் பிறந்தநாளில் மிகவும் உருக்கமாக போட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி, பார்ப்பவர்கள் நெஞ்சங்களையே உருக வைத்துள்ளது.
கோடி கோடியாய்... எவ்வளவு சம்பாதித்திருந்தாலும், பேரும்... புகழும் கிடைத்தாலும், உண்மையான சந்தோசம் எது என்பதை புரியவைப்பது குழந்தை செல்வம் தான். எவ்வளவு சோர்வாகவும், மன அழுத்தத்தில் இருந்தாலும், மழலையின் சிரிப்பு ஒரு நிமிடத்தில் நம்மை மாற்றி... அனைத்தையும் மறக்க செய்து புத்துணர்ச்சியை கொடுக்கும்.
இப்படி ஒரு குழந்தையின் இழப்பு என்பது எவ்வளவு பெரிய வலி என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அப்படி ஒரு தேவதையை இழந்து தான் தவித்து வருகிறார் பிரபல பின்னணி பாடகி கே.எஸ்.சித்ரா. இவர் பிரபல தொழிலதிபர் விஜய் ஷங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு சுமார் 15 வருடம் கழித்து பிறந்த குழந்தை தான் நந்தனா.
செம்ம மாஸ்... 'துணிவு' படத்தில் மஞ்சு வாரியர் பாடிய 'காசே தான் கடவுளடா' லிரிக்கல் பாடல் வெளியானது!
தன்னுடைய அன்பை கொட்டி சித்ரா இவரது மகளை வளர்த்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு, துபாயில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தன்னுடைய மகளையும் அழைத்து சென்றார் சித்ரா.
துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்து தன்னுடைய மகளுடன் சித்ரா தங்கி இருந்த நிலையில்... அந்த ஹோட்டலில் இருந்த நீச்சல் குளத்தில், எதிர்பாராத விதமாக விழுந்து... உயிரிழந்தார் 'நந்தனா'. தன்னுடைய 8 வயது மகளை இழந்த துயரத்தில் இருந்து, சித்ரா மீண்டு வருவதற்கே பல வருடங்கள் ஆன நிலையில், இன்று தன்னுடைய மகளின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் போட்டுள்ள பதிவு அனைவரது நெஞ்சங்களையும் கலங்க செய்துள்ளது.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது... "நீங்கள் தேவதைகளுடன், சொர்க்கத்தில் நாளை கொண்டாடுங்கள். எல்லோர் இடத்திலும் அன்பு செலுத்தும் உனகளுக்கு, எத்தனை ஆண்டுகள் வந்தாலும், சென்றாலும் ஒருபோதும் வயதாகி விடாது. இதன் மூலம், நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும், நீங்கள் தொலைவில் இருந்தாலும், நான் எப்போதும் நேசிக்கிறேன். இன்று உன்னை இன்னும் கொஞ்சம் அதிகமாகவே மிஸ் செய்கிறேன் என போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.