Avatar 2 box office: 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' இரண்டே நாளில் அடித்து நொறுக்கிய வசூல்? முழு விவரம் இதோ..!
அவதார் திரைப்படம் இரண்டாவது நாளில் ஈட்டிய வசூல் குறித்த விவரம் தற்போது வெளியாகி அனைவரையும் பிரமிக்க செய்துள்ளது.
வித்யாசமான கதைக்களத்துடன் வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே உலக அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவுவது வழக்கம். அந்த வகையில் உலகையே வியப்பில் ஆழ்த்திய திரைப்படம் என்றால் கடந்த 2009 ஆம் ஆண்டு, பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான 'அவதார்' திரைப்படம்.
இதுவரை ரசிகர்கள் கற்பனை கூட செய்ய பார்க்க முடியாத ஒரு உலகில் ரசிகர்களை அழைத்து சென்று, பிரமிக்க வைத்தார் ஜேம்ஸ் கேமரூன். இதுவரை உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக இருந்து வருகிறது. எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் நிலவி வந்த நிலையில், சுமார் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது.
முதல் பாகத்தில், காட்டிற்குள் வாழும் அவதார் பற்றிய கதையை படமாக்கிய இயக்குனர், இந்த முறை... தண்ணீருக்குள் வாழும் அவதாரின் உலகை கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு இயக்கியுள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் உலக அளவில் அடித்து நொறுக்கி வருகிறது.
முதல் நாளில் உலக அளவில், சுமார் 1000 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்ட நிலையில்... அடுத்தடுத்து விடுமுறை நாள் என்பதால் இரண்டாவது நாளும் 1000 கோடிக்கு மிகாமல் வசூல் செய்து இதுவரை சுமார் 2100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கப்பட்டதில் இருந்து, சுமார் ஒரு வாரத்திற்கு அணைத்து டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டு விட்டதால், வரும் நாட்களில் பல கோடிகளை 'அவதார் 2' அள்ளும் என சினிமா விமர்சகர்களும் கூறியுள்ளனர்.
இவரு நம்ப லிஸ்டிலேயே இல்லையே? பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளரால் ரசிகர்கள் அதிர்ச்சி!