பொன்னியின் செல்வன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது டபுள் சந்தோஷத்தில் உள்ளாராம்.

நடிகை ஐஸ்வர்யா ராய், தமிழில் ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்ட பின்னர் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இவர் திருமணத்துக்கு பின் ராவணன், எந்திரன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய மூன்று தமிழ் படங்களில் தான் நடித்தார்.

இதில் கடந்த செப்டம்பர் மாதம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வேறலெவல் ஹிட் ஆனது. இப்படத்தில் நந்தினி என்கிற பவர்புல்லான வில்லத்தனம் வாய்ந்த கேரக்டரில் திறம்பட நடித்து பாராட்டுக்களை பெற்றார் ஐஸ்வர்யா ராய். தமிழில் அவருக்கு இது தரமான கம்பேக் திரைப்படமாக அமைந்தது.

இதையும் படியுங்கள்... பாலிவுட் முதல் கோலிவுட் வரை... அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வெற்றியை அதகளமாக கொண்டாடிய சினிமா நட்சத்திரங்கள்

பொன்னியின் செல்வன் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் தற்போது டபுள் சந்தோஷத்தில் உள்ளாராம். அதன்படி இவர் வாங்கியுள்ள ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் என்கிற கபடி அணி, சமீபத்தில் நடந்த முடிந்த புரோ கபடி லீக்கின் இறுதிப்போட்டியில் புனேரி பல்டன்ஸை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.

இதனால் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அந்த அணி கோப்பையை வெல்வது இது இரண்டாவது முறை ஆகும். இறுதிப்போட்டி முடிந்ததும் தனது மகள் ஆராத்யாவுடன் இணைந்து தங்கள் அணியில் சிறப்பாக விளையாடிய அஜித்குமார் என்கிற வீரரை பாராட்டிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் ஆராத்யா ஆகியோர் கோப்பையுடன் இணைந்து போஸ் கொடுத்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.

View post on Instagram
View post on Instagram

இதையும் படியுங்கள்... திடீரென பாக்ஸராக களமிறங்கி ஓங்கி குத்துவிட்ட அமைச்சர் ரோஜா... பதறிப்போன அதிகாரிகள் - வைரலாகும் போட்டோஸ்