பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான சினிமா நட்சத்திரங்களும் அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை வெற்றியை கொண்டாடும் விதமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பு இதோ.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது அர்ஜென்டினா அணி. மெஸ்ஸி தலைமையிலான இந்த அணியின் வெற்றியை இந்தியர்கள் தங்கள் நாட்டின் வெற்றிபோல் கொண்டாடி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான சினிமா நட்சத்திரங்களும் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

Scroll to load tweet…

கத்தாரில் நடைபெற்ற இந்த போட்டியை காண மலையாள நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் ஸ்டேடியத்துக்கே சென்று இருந்தனர். விறுவிறுப்பான இந்த போட்டியை நேரில் கண்டுகளித்தது வேறலெவல் அனுபவமாக இருந்ததாக இருவருமே தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தனர்.

Scroll to load tweet…

நடிகர் தனுஷ் இதுகுறித்து பதிவிட்டுள்ளதாவது : “மெஸ்ஸி இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர். டி மரியா தேவையான நேரத்தில் உதவினார். எமி மார்டினேஸ் தான் இந்த போட்டியின் நாயகன், ஏன் இந்த உலகக் கோப்பையின் நாயகன் என்றே சொல்லலாம். இந்த வருடத்தின் மகிழ்ச்சியான நாள் இது” என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ஷாருக்கான் பதிவிட்டுள்ளதாவது : இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் சிறந்தது இது தான். நான் குழந்தையாக இருக்கும்போது என் அம்மாவுடன் சிறிய டிவியில் பார்த்தபோது என்ன ஒரு ஆரவாரம் இருந்ததோ அதே ஆரவாரம் தற்போது என் குழந்தைகளுடன் பார்க்கும்போதும் இருந்தது. திறமை, கடின உழைப்பு மற்றும் கனவுகள் மீது நம்பிக்கை வைக்கலாம் என நீரூபித்ததற்கு நன்றி மெஸ்ஸி” என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

அதேபோல் மெஸ்ஸியின் தீவிர ரசிகையான நடிகை கீர்த்தி சுரேஷ், அர்ஜென்டினாவின் ஜெர்ஸியை அணிந்துகொண்டு இறுதிப்போட்டியை பார்த்துள்ளார். அதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்து அர்ஜென்டினாவின் வெற்றியை கொண்டாடி உள்ளார்.

Scroll to load tweet…

இதுதவிர பாலிவுட் நடிகர்கள் ரன்வீர் சிங், அஜய் தேவ்கன், ரன்தீப் ஹூடா ஆகியோரும், நடிகை பிரீத்தி ஜிந்தா, மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஆகியோரும் அர்ஜென்டினாவின் வெற்றியை பாராட்டி தங்களது டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... டேய் எப்புட்ரா... அர்ஜென்டினாவின் உலகக்கோப்பை வெற்றியை 7 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த ரசிகர் - வைரலாகும் டுவிட்