ஓயாமல் மாணவனுக்கு ஓரினச்சேர்க்கை டார்ச்சர்! டிஸ்மிஸ் ஆன பள்ளி ஆசிரியர்! அவமானத்தால் எடுத்த விபரீத முடிவு.!
மயிலாடுதுறையில் ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன் (38). பள்ளி மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார்.
மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறையில் ஒரு தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சீனிவாசன் (38). பள்ளி மாணவர்கள் விடுதியையும் கண்காணித்து வந்துள்ளார். இவர், அதே பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவனிடம் ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தி டார்ச்சர் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த மாணவன் ஆசிரியர் செய்த செயலை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இதையும் படிங்க;- கணவர் ஃபாரின் சென்ற நேரத்தில் தாய் மாமா மகனுடன் உல்லாசம்.. இடையூறாக இருந்த கணவரை போட்டு தள்ள முயன்ற மனைவி.!
இந்த விசாரணையில் சீனிவாசன் பல மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியது தெரியவந்தது. இதனால், ஆசிரியர் சீனிவாசனை பள்ளி நிர்வாகம் பணி நீக்கம் செய்த நிலையில், சீனிவாசன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனை சிகிச்சை முடிந்து வந்த சீனிவாசனை மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம்! சிக்கிய மனைவி! இறுதியில் நடந்த துயரம்