கணவர் ஃபாரின் சென்ற நேரத்தில் தாய் மாமா மகனுடன் உல்லாசம்.. இடையூறாக இருந்த கணவரை போட்டு தள்ள முயன்ற மனைவி.!

மதுரை திருப்பாலை பிவிகேஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வைஷ்ணவி(24). இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் செந்தில்குமார் ஆண்டுக்கு இருமுறை குடும்பத்தை பார்க்க சொந்த ஊருக்கு வந்து செல்வார். 

illegal love affair...Wife Arrest

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலன் உதவியுடன் கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மனைவி, கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மதுரை திருப்பாலை பிவிகேஆர் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(35). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வைஷ்ணவி(24). இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. வெளிநாட்டில் இருக்கும் செந்தில்குமார் ஆண்டுக்கு இருமுறை குடும்பத்தை பார்க்க சொந்த ஊருக்கு வந்து செல்வார். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது, ஹெல்மட் அணிந்து வந்த மர்ம நபர்கள் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில், படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, சந்தேகத்தின் பேரில் செந்தில்குமார் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். 

மேலும், அவரது செல்போனை ஆய்வு செய்த போது நீண்ட நேரம் சிவகங்கையை சேர்ந்த அவரது தாய் மாமா மகன் வெங்கடேசன்(25) என்பவருடன் பேசியுள்ளது தெரியவந்தது. இறுதியில் கணவனை கொலை செய்ய  கூலிப்படை ஏவியதை மனைவி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, வைஷ்ணவி, அவரது கள்ளக்காதலன் வெங்கடேசன், கூலிப்படை தலைவன் சாந்தகுமார் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios