Asianet News TamilAsianet News Tamil

காதலியுடன் உடலுறவு.. ரகசியமாக படம்பிடித்த இளைஞன்.. நீதிமன்றம் சொன்ன வித்தியாசமான தீர்ப்பு - என்ன தெரியுமா?

பெண்கள் தன்னுடன் உடலுறவு கொள்வதை ரகசியமாக படம்பிடித்ததற்காக இளங்கலை பட்டதாரிக்கு தண்டனை வழங்கி உள்ளது நீதிமன்றம்.

Undergraduate gets 1.5 year treatment order for secretly filming women having sex with him
Author
First Published Dec 19, 2022, 3:55 PM IST

சிங்கப்பூர் : டிண்டர் மூலம் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது ரகசியமாக படம்பிடித்ததற்காக இளங்கலை பட்டதாரிக்கு தண்டனை வழங்கி உள்ளது நீதிமன்றம்.

சிங்கப்பூரில் உள்ள நீதிமன்றம் முக்கிய வழக்கு ஒன்றில் அதிர்ச்சிகர தீர்ப்பை வழங்கியுள்ளது. டேட்டிங் அப்ளிகேஷனான டிண்டர் மூலம் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது ரகசியமாக படம்பிடித்ததற்காக அந்த பட்டதாரி இளைஞருக்கு 1.5 வருடம் சிகிச்சையில் இருக்குமாறு ஆணை விதிக்கப்பட்டுள்ளது.

Undergraduate gets 1.5 year treatment order for secretly filming women having sex with him

கடந்த 2020 ஆம் ஆண்டில் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை, அவர்களின் அனுமதியின்றி எடுத்ததாக இளைஞர் ஒப்புக்கொள்ள இந்த தண்டை கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் தனது தீர்ப்பை வழங்கிய துணை முதன்மை மாவட்ட நீதிபதி லூக் டான்,  குற்றஞ்சாட்டடப்பட்ட நபரின் மனநிலையை சரிசெய்வது அவசியம். ஒரு குற்றவாளிக்கு மனநலக் கோளாறு இருந்தால், குறிப்பாக, தீய செயல்களுக்கு ஒருவரின் மனநிலை சார்ந்தும் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இதையும் படிங்க..செலவே இல்லாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா.? நீங்க வந்தா மட்டும் போதும்! - இந்த நாடு பற்றி தெரியுமா உங்களுக்கு?

என்ன நடந்தது ?

அக்டோபர் 23, 2020 அன்று, பாதிக்கப்பட்ட 18 வயது பெண், சம்பந்தப்பட்ட இளைஞருடன் உடலுறவு கொள்ள பல்கலைக்கழக விடுதிக்குச் சென்றார். உடலுறவு கொள்ளும்போது, அந்த இளைஞன் அதனை கேமராவில் பதிவு செய்வதை உணர்ந்த அந்த பெண், ஏன் என்று கேட்டுள்ளார்.

Undergraduate gets 1.5 year treatment order for secretly filming women having sex with him

அதற்கு நான் மொபைலில் எதையும் பதிவு செய்யவில்லை என்று கூற, சரி என்று சொல்லி உள்ளார் அந்த பெண். பிறகு அன்று இரவு இருவரும் சாப்பிட அருகில் உள்ள ஹோட்டலுக்கு செல்ல, உனக்கு காதலியாக நான் இருக்கிறேன் என்று கூற, அந்த இளைஞர் அதனை மறுக்க, வாக்குவாதம் ஆனது.

அந்த இளைஞனை மீண்டும் அந்த பெண் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ள முயற்சிக்க பிளாக் செய்யப்பட்டதை உணர்ந்தார். பிறகு காவல்துறையிடம் புகார் அளிக்க இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. மயானங்களில் குவியும் சடலங்கள் - சீனாவில் என்ன நடக்கிறது?

Follow Us:
Download App:
  • android
  • ios