Asianet News TamilAsianet News Tamil

செலவே இல்லாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா.? நீங்க வந்தா மட்டும் போதும்! - இந்த நாடு பற்றி தெரியுமா உங்களுக்கு?

நீங்கள் குறிப்பிட்ட ஒரு நாட்டை சுற்றிப்பார்க்க, அவர்கள் பணம் செலுத்துவார்கள் தெரியுமா ?

This Italian region will pay you to visit heres what to know
Author
First Published Dec 18, 2022, 7:43 PM IST

சுற்றுலா செல்வது என்பது அனைவருக்கும் பிடித்த விஷயம். கிணற்று தவளையாக ஓரிடத்தில் வாழ்வது எப்போது இன்பம் தராது. பல புதிய இடங்களுக்குச் செல்வதும், பல்வேறு மக்களை காண்பதும் நம் உணர்வை மட்டுமில்லாது உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.

எல்லோரும் அடிக்கடி சுற்றுலா செல்வதில்லை. அதிகமான பணத்தேவையும், இதர செலவுகளும் அவர்களை உலகை சுற்றி பார்ப்பதிலிருந்து தடுத்துவிடுகிறது. ஆனால் இங்கு நீங்கள் குறிப்பிட்ட ஒரு நாட்டை சுற்றிப்பார்க்க, அவர்கள் பணம் செலுத்துவார்கள் தெரியுமா ? அடேங்கப்பா, இப்படியொரு விஷயம் இருக்கா என்று அனைவரும் ஆச்சர்யப்படுவதில் சந்தேகமில்லை.

This Italian region will pay you to visit heres what to know

இலவச சுற்றுலா பயணம் :

இத்தாலி நாட்டின் வடகிழக்கில் உள்ள Friuli Venezia Giulia, என்ற பகுதி தான் அது. நீங்கள் இத்தாலியில் எங்கிருந்தும் ரயிலில் பயணித்தாலும், பார்வையாளர்களின் பயண கட்டணங்களை திருப்பிச் செலுத்தும். நீங்கள் செல்லும் அருங்காட்சியகங்களுக்கு இலவச நுழைவு, இலவச பொதுப் போக்குவரத்து மற்றும் பிற இடங்களில் தள்ளுபடிகள் ஆகியவற்றைப் பெறும் ஒரு அட்டையையும் உங்களுக்கு வழங்கப்படும்.

இதையும் படிங்க..அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. மயானங்களில் குவியும் சடலங்கள் - சீனாவில் என்ன நடக்கிறது?

இதற்கு சில விதிமுறைகள் மட்டுமே உள்ளது. நீங்கள் குறைந்தது இரண்டு இரவுகள் தங்க வேண்டும் இந்த பகுதியில் தங்க வேண்டும். அங்கு நீங்கள் பண்டைய கலை நகரங்கள், மலைகள் மற்றும் இத்தாலியின் சிறந்த கடற்கரைகள் காணலாம்.இது மே 31, 2023 வரை மட்டுமே செல்லுபடியாகும். Promo Turismo FVG  என்ற உள்ளூர் சுற்றுலா வாரியம் Trieste மற்றும் Udine நகரங்களுக்கும், Grado மற்றும் Lignano Sabbiadore ஆகிய கடலோர ரிசார்ட்டுகளுக்கும் வரும் பயணிகளின் உள்நாட்டு ரயில் கட்டணங்களைத் திருப்பிச் செலுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் அரசு நடத்தும் ட்ரெனிடாலியா ரயில்கள் முதல் இன்டர்சிட்டி மற்றும் அதிவேக ஃப்ரீஸ் பாதைகள் வரை பயணிக்கலாம். இதற்கு நீங்கள் செய்யக்கூடியது என்னவென்றால், ஏதாவது ஒரு ஹோட்டலில் நீங்கள் ரூமை முன்பதிவு செய்ய வேண்டும். அதுவும் இரண்டு இரவு பேக்கேஜை முன்பதிவு செய்யும் போது, திரும்பும் ரயில் டிக்கெட்டின் விலை மொத்தத்தில் இருந்து தள்ளுபடியாகக் கழிக்கப்படும். விருந்தினர்களுக்கு இலவச FVG அட்டையும் வழங்கப்படும். இதன் மூலம் நீங்கள் அருங்காட்சியகங்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணங்களுக்கு நீங்கள் இலவசமாகவும், அல்லது தள்ளுபடியும் செய்யப்படும்.

This Italian region will pay you to visit heres what to know

எங்கு செல்ல வேண்டும் ? :

ட்ரைஸ்டே வடக்கு இத்தாலியின் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரம் ஆஸ்ட்ரோ - ஹங்கேரியப் பேரரசால் இணைக்கப்பட்டது. இங்கு வியன்னா பாணி காபி கலாச்சாரம் தற்போது வரை உள்ளது. ஆஸ்திரியர்களால் கட்டப்பட்ட நகரத்தின் முழு பகுதியாக இன்றளவும், பழமை மாறாமல் உள்ளது. ஒரு காலத்தில் வெனிஸ் மற்றும் ஆஸ்திரிய பேரரசுகளின் ஒரு பகுதியாக இருந்த இப்பகுதி, உள்ளூர் ஃப்ரியூலியன் கலாச்சாரத்தின் மையமாக உள்ளது.

இரண்டு கடற்கரை இடங்களுள், கிராடோ "வெனிஸின் தாய்" என்று அழைக்கப்படுகிறது. லிக்னானோ சப்பியாடோரோ என்பது அட்ரியாட்டிக்கின் சிறந்த கடற்கரை ஓய்வு விடுதிகளில் ஒன்றாகும். Trieste அல்லது Udine க்கு பயணம் செய்பவர்கள், இரண்டு இரவு தங்குவதற்கு 48 மணிநேர FVG கார்டைப் பெறுவீர்கள் அல்லது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்குவதற்கு ஒரு வாரம் முழுவதும் ஒரு அட்டையைப் பெறுவீர்கள். இது முக்கிய அருங்காட்சியகங்களுக்கு இலவச பயணங்களை அனுமதிக்கும்.

This Italian region will pay you to visit heres what to know

முன்பதிவு அவசியம் :

குளங்கள் முதல் திரையரங்குகள் வரையிலான சேவைகளுக்கான தள்ளுபடிகள் மற்றும் சிறப்பு கண்காட்சிகளுக்கான இலவச அனுமதி என பலவும் இதில் அடங்கும். கிராடோ அல்லது லிக்னானோ சப்பியாடோரோவின் கடலோர ஓய்வு விடுதிகளுக்குச் செல்ல விரும்புபவர்கள் ஒரு அட்டையைப் பெறுவார்கள். இருப்பினும் கடற்கரையோரத்தில் டிக் செய்வதற்கு குறைவான அருங்காட்சியகங்கள் உள்ளன.

ரிட்டர்ன் டிக்கெட்டுகளை நீங்கள் பெற வேண்டுமானால், ஐந்து நிலையங்களில் ஒன்றிற்குச் செல்ல வேண்டும். அவை,  Latisana-Lignano-Bibione, Cervignano-Aquileia-Grado, Trieste Airport, Trieste Centrale அல்லது Udine. இந்த பயணத்திற்கு மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..சொத்து பட்டியலை வெளியிட தயார்! வேலியில் போகிற ஓணானை.. அண்ணாமலைக்கு சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

இதையும் படிங்க..2024 டார்கெட்! ராகுலுடன் கைகோர்த்த கமல்ஹாசன்.. அப்போ திமுக + காங்கிரஸ் + மநீம கூட்டணி கன்ஃபார்ம்!

Follow Us:
Download App:
  • android
  • ios