அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்.. மயானங்களில் குவியும் சடலங்கள் - சீனாவில் என்ன நடக்கிறது?

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் நோய் தற்போது அடங்கியுள்ளது. எனினும் சீனாவில் இந்த வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

In COVID hit Beijing China may be covering Covid deaths

சீனாவில் தொடர்ந்து கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீனா விழிபிதுங்கி வருகிறது. 

உலக அளவில் பெரும் பொருளாதார பாதிப்பு, உயிரிழப்பு என கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவிட் 19 எனப்படும் கொரோனா நோய்த்தொற்று பரவியது. சில மாதங்களிலேயே உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக அளவில் பெரும் பொருளாதார பாதிப்பு, உயிரிழப்பு என கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

In COVID hit Beijing China may be covering Covid deaths 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்தாலும் சீனாவில் குறைந்தபாடில்லை. சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நோய்த்தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை சீனா விதித்தாலும், பொதுமக்கள் அதனை மதிக்காமல் இருப்பதால் தான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது என்று அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.

இதையும் படிங்க..டிசம்பர் 21 - நேரம் குறிச்ச ஓபிஎஸ் டீம்.. பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட பிளான்.. பதறும் இபிஎஸ் & கோ

சீனாவில் பெய்ஜிங் போன்ற நகரங்களில் ஊரடங்குக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களின் போராட்டத்தால் சீன அரசு பல்வேறு இடங்களில் கட்டுப்பாட்டை விடுவித்தது.தற்போது சீனாவில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை அரசு மறைத்து வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. 

சீனாவில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள மயானங்களில் தினமும் 100க்கும் மேற்பட்ட பிணங்கள் குவிந்து வருகிறது என்று கூறப்படுகிறது.ஹூருவில் பணியாற்றும் மயான ஊழியர் இதுகுறித்து செய்தி நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில்,  ழக்கமான நாட்களில் இங்கு 10-12 சடலங்கள் தகனம் செய்யப்பட்டன. இப்போது தினமும் சுமார் 150 இறந்த உடல்கள் இங்கு வருகிறது. அனைத்து மயானங்களிலும் சடலங்கள் குவிந்து வருகிறது.

In COVID hit Beijing China may be covering Covid deaths

சடலத்தை அப்புறப்படுத்த முடியாமல் 3 நாட்களாக தவித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போதுமான ஊழியர் பற்றாக்குறை, ஊழியர்களுக்கு கொரோனா தொற்று,  போன்ற பிரச்சினைகள் உள்ளன. இது தொடர்ந்தால் நாளடைவில் பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கும் என்று கூறினார்.

குரூப்ஸ் புரொஜக்ஷன் கூற்றுப்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமானதாக இருக்கும். சீன மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்ற அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..சொத்து பட்டியலை வெளியிட தயார்! வேலியில் போகிற ஓணானை.. அண்ணாமலைக்கு சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios