MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாட்டு இருக்கு... உங்க வாய்ஸ் எங்க? மீம் போட்டு கலாய்த்த நெட்டிசன்களுக்கு மஞ்சு வாரியர் கொடுத்த மாஸ் ரிப்ளை

பாட்டு இருக்கு... உங்க வாய்ஸ் எங்க? மீம் போட்டு கலாய்த்த நெட்டிசன்களுக்கு மஞ்சு வாரியர் கொடுத்த மாஸ் ரிப்ளை

துணிவு படத்தில் இடம்பெறும் காசேதான் கடவுளடா பாடலை வைஷாக் என்பவருடன் இணைந்து மஞ்சு வாரியரும் பாடி உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. 

2 Min read
Author : Ganesh A
Published : Dec 19 2022, 07:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மலையாள திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான அசுரன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அப்படம் ஹிட்டானபோதும் தமிழில் தொடர்ந்து நடிக்காமல் இருந்து வந்த மஞ்சு வாரியர், தற்போது அஜித்தின் துணிவு படம் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித்தின் டீம் மேட்டாக நடித்துள்ளார் மஞ்சு வாரியர். இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்று துணிவு படத்தில் இருந்து காசேதான் கடவுளடா என்கிற பாடல் வெளியிடப்பட்டது.

இதையும் படியுங்கள்... Avatar 2 box office: 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' இரண்டே நாளில் அடித்து நொறுக்கிய வசூல்? முழு விவரம் இதோ..!

34

இப்பாடலை வைஷாக் என்பவருடன் இணைந்து மஞ்சு வாரியரும் பாடி உள்ளதாக கூறப்பட்டு இருந்தது. மஞ்சு வாரியர் பாடியுள்ள முதல் தமிழ் பாடல் என்பதால், இது எப்படி இருக்கும் என ஆவலோடு கேட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாடல் முழுக்க வைஷாக்கின் குரல் மட்டுமே நிரம்பி இருந்தது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள், இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா... உங்க வாய்ஸ எங்க? என மஞ்சு வாரியரை மீம் போட்டு கலாய்க்க தொடங்கினர்.

44

மீம்ஸ்கள் அதிகளவில் வந்ததால், இதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்த மஞ்சு வாரியர், “காசேதான் கடவுளடா பாடலில் என்னுடைய வாய்ஸ் கேட்கவில்லை என யாரும் வருத்தப்பட வேண்டாம். நான் ரெக்கார்ட் செய்தது வீடியோ வெர்ஷனுக்காக, படத்தில் அது இடம்பெறும். உங்கள் அக்கறைக்கு நன்றி. ட்ரோல்களை என்ஜாய் செய்தேன்” என பதிவிட்டு கூலாக பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... உன்னை மிஸ் செய்கிறேன்... மறைந்த மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பாடகி சித்ரா! நெஞ்சை உலுக்கும் பதிவு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Idhayam Murali Review : இதயம் தொட்டதா? இரிடேட் பண்ணியதா? இதயம் முரளி விமர்சனம்
Recommended image2
Velpari Movie : ஷங்கரின் வேள்பாரியில் சூர்யாவா? தனுஷா? யார் ஹீரோ?
Recommended image3
I Nobody Review : பிருத்விராஜ் சுகுமாரன் நடிச்ச 'ஐ நோபடி' சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved