அதிமுக முன்னாள் எம்பிக்கு அமைப்பு செயலாளர் பதவி..! இபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த ஓபிஎஸ்
அதிமுகவில் ஓபிஎஸ் அணியின் அமைப்பு செயலாளராக முன்னாள் எம்பி மைத்ரேயனை நியமனம் செய்து ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓ பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி என இரண்டு தரப்பாக பிரிந்துள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் தான் என ஓபிஎஸ்ம், பொதுச் செயலாளர் தான் என எடப்பாடி பழனிச்சாமியின் மாறி மாறி கூறி வருகின்றனர். இதே போல நீதிமன்றத்திலும் ஒரு முறை ஓபிஎஸ்க்கு சாதகமாகும் மறுமுறை இபிஎஸ்க்கு சாதமாகவும் தீர்ப்புகளும் மாறி மாறி வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொது குழு தொடர்பான வழக்கானது நிலுவையில் உள்ளது. இதனையடுத்து தனது அணியை பலப்படுத்தும் வகையில் ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்துள்ளார். மேலும் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் என அனைத்து அமைப்புகளுக்கும் நிர்வாகிகளை ஓபிஎஸ் நியமித்துள்ளார்.
ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.. 4ஆக பிரிந்துள்ள அதிமுக கம்பெனி 6 மாதத்தில் மூடப்படும்.. கோவை செல்வராஜ்..!
அமைப்பு செயலாளர் நியமனம்
எடப்பாடி பழனிசாமியோ தமிழகம் முழுவதும் சுற்றப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் திமுக அரசுக்கு எதிராக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என ஒவ்வொரு இடங்களிலும் போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்தநிலையில் ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இபிஎஸ் அணியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஓபிஎஸ் அணியில் இணைந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயனுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கி ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
டிசம்பர் 21 - நேரம் குறிச்ச ஓபிஎஸ் டீம்.. பண்ருட்டி ராமச்சந்திரன் போட்ட பிளான்.. பதறும் இபிஎஸ் & கோ