Asianet News TamilAsianet News Tamil

ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.. 4ஆக பிரிந்துள்ள அதிமுக கம்பெனி 6 மாதத்தில் மூடப்படும்.. கோவை செல்வராஜ்..!

கோவை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் உட்பட 3000 அதிமுகவினர் விரைவில் முதலமைச்சர் தலைமையில் திமுகவில் இணைவார்கள். கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். 

AIADMK company which has split into 4 will be closed in 6 months... Kovai Selvaraj
Author
First Published Dec 19, 2022, 7:54 AM IST

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியில் ஊழல் தொடர்பான பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கொடுக்க உள்ளேன் என கோவை செல்வராஜ் கூறியுள்ளார். 

சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- அதிமுக என்னும் கம்பெனி 6 மாதத்திற்குள் மூடப்படும். அந்த கம்பெனி 4ஆக பிரிந்துள்ளது. யார் கூறியும் திமுகவில் இணையவில்லை. நானாகவேதான் இணைந்தேன். முந்தைய அதிமுக ஆட்சியில் நடைபெற்ற எல்.இ.டி பல்பு, கோவை குளங்கள், தூர்வாரும் பணி, குட்கா உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் தொடர்பாக தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் அடுத்த வாரம் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் முதல்வரிடம் நேரில் ஒப்படைக்க இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க;- திமுகவில் இணைந்த கோவை செல்வராஜூக்கு ஓபிஎஸ் இந்த பதவி கொடுக்க முன்வந்தாரா? ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ பரபரப்பு தகவல்

AIADMK company which has split into 4 will be closed in 6 months... Kovai Selvaraj

அன்னூர் பகுதியில் தரிசு நிலங்களாக இருக்கும் பூமிகளை மட்டும் எடுத்து தொழிற்பூங்கா அமைக்கவும், விவசாய நிலங்களில் விவசாயமே செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் விவசாயிகளின் பாதுகாவலனாக விளங்குகிறார். 

AIADMK company which has split into 4 will be closed in 6 months... Kovai Selvaraj

கோவை மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் உட்பட 3000 அதிமுகவினர் விரைவில் முதலமைச்சர் தலைமையில் திமுகவில் இணைவார்கள். கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். பாஜகவிற்கு தமிழகத்தில் வருங்காலம் இல்லை. ஓபிஎஸ் உடன் தாம் உண்மையாக இருந்த போதும் அவர் அவ்வாறு இல்லை என கோவை செல்வராஜ் கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்- அண்ணா அறிவாலயத்தில் கோவை செல்வராஜ் ஆவேசம்

Follow Us:
Download App:
  • android
  • ios