MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • யம்மாடியோ... 3 நாட்களில் 3 ஆயிரம் கோடியா! உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் ‘அவதார் 2’

யம்மாடியோ... 3 நாட்களில் 3 ஆயிரம் கோடியா! உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடும் ‘அவதார் 2’

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ள அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.133 கோடி வசூலித்து உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : Dec 19 2022, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு ரிலீசான அவதார் திரைப்படம் உலக சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. கர்ப்பனையின் உச்சமாக பார்க்கப்பட்ட இப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 16-ந் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீசானது. முதல் பாகம் வெளியாகி 13 ஆண்டுகளுக்கு பின் அதன் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக இருந்தது.

24

இதனால் இப்படம் உலகம்  முழுவதும் 160 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்பட்டது. இப்படம் விமர்சன ரீதியாக சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், இப்படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் வாவ் சொல்ல வைக்கும் அளவுக்கு இருப்பதால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

இதையும் படியுங்கள்... பாலிவுட் முதல் கோலிவுட் வரை... அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வெற்றியை அதகளமாக கொண்டாடிய சினிமா நட்சத்திரங்கள்

34

இப்படம் வெளியாகிய மூன்று நாட்களில் இந்தியாவில் மட்டும் ரூ.133 கோடி வசூலித்து உள்ளது. இதில் விடுமுறை தினமான நேற்று மட்டும் இப்படம் ரூ.50 கோடியை வசூலித்து இருக்கிறது. அதேபோல் உலகளவில் இப்படம் மூன்று நாட்களில் ரூ.3 ஆயிரத்து 598 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி அவதார் 2 படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இப்படம் விரைவில் அவதார் முதல் பாகத்தின் வசூலை முறியடித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44

அவதார் 2 படத்தின் வசூலைப் பொறுத்து தான் அதன் அடுத்த பாகத்தை வெளியிடுவது குறித்து முடிவு எடுப்பேன் என இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்திருந்தார். தற்போது அவர் எதிர்பார்த்தபடியே அப்படத்தின் வசூல் விண்ணைமுட்டும் அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விரைவில் அவதார் மூன்றாம் பாகம் உருவாக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்... பாட்டு இருக்கு... உங்க வாய்ஸ் எங்க? மீம் போட்டு கலாய்த்த நெட்டிசன்களுக்கு மஞ்சு வாரியர் கொடுத்த மாஸ் ரிப்ளை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
யாருக்கும் தெரியாமல் பிளான் பண்ணிய கார்த்திக் – ஷாக்கான சந்திரகலா; கார்த்திகை தீபம் சீரியல்!
Recommended image2
கருவை கலைக்க துணிந்த ரோகிணி! ஜோதிடரின் முகத்திரையை கிழித்த கார்த்திக்.. கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image3
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved