புக்கர் பரிசு வென்றவரான இவர், சௌதாகுவ நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் தாக்குதலுக்கு ஆளானார் என்றும், பார்வையாளராக இருந்த நபர் திடீரென மேடை மீது ஏறி ருஷ்டியை குத்தித் தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். சல்மான் ருஷ்டி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
09:36 PM (IST) Aug 12
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அமெரிக்காவின் நியூயார்க்கில் இன்று கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் சொற்பொழிவு செய்யவிருந்தபோது தாக்கப்பட்டார் என்று செய்தி வெளியாகி உள்ளது.
08:13 PM (IST) Aug 12
தமிழகத்தின் சிறந்த நகராட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்வாகியுள்ளதாக என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் சிறந்த நகராட்சியாக தேர்வான ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு 15 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையு அறிவிக்கப்பட்டுள்ளது.
07:58 PM (IST) Aug 12
கடவுளைப் பற்றி பேசியதில் இருந்து, ஒரு சமுதாயத்தை தாக்கி பேசியதில் இருந்து மாறுபடுகிறேன். அதே நேரத்தில், இந்த மண்ணில் பலர் பல கருத்தை பேசியுள்ளனர். இந்தியாவில் சமூக சீர்த்திருத்ததிற்காக பெரியார் உள்ளிட்ட பலர் பாடுபட்டுள்ளார்கள்.
06:29 PM (IST) Aug 12
தன்னுடன் படிக்கும் சக மாணவிகளை போதைக்கு அடிமையாகி அவர்களுடன் 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. சமீபகாலமாக பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது.மேலும் படிக்க
06:28 PM (IST) Aug 12
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரையும் சாதி பார்த்து கைது செய்யவில்லை என்றும், கலவரத்தில் ஈடுபட்டவர்களைதான் போலீசார் கைது செய்கின்றனர் என்றும் எச். ராஜா கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டதாக தலித்துகளை குறிவைத்து போலீசார் கைது செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ள நிலையில் எச். ராஜா இவ்வாறு விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
06:27 PM (IST) Aug 12
பட்டியல் இனத்தைச் சேர்ந்த 22 ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலையில் அமர்த்தப்படுகிறார்கள் என்றும் 20 ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இதுதான் சமூக நீதி ஆட்சியா என தமிழக அரசை விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
06:26 PM (IST) Aug 12
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாளான இன்று அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மரக்கன்று நட்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது அவரது தாய் தந்தை மரக்கன்றுகளை நட்டனர். மேலும் படிக்க
06:26 PM (IST) Aug 12
நாட்டின் 65வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையிலும் ஆங்கிலேயர்களின் ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும் ஆனால் அந்த வார்த்தை அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடமிருந்தோ வருவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் படிக்க
03:53 PM (IST) Aug 12
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் காலியாக உள்ள Assistant Accounts Officer, Senior Accounts Officer போன்ற பல்வேறு பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மேலும் படிக்க
03:42 PM (IST) Aug 12
ஜெயம் ரவி 29 -ல் பணியாற்றி வந்த பெப்சி தொழிலாளர் ஒருவர் கோடாவில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். தற்போது அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என கூறப்படுகிறது.
மேலும் படிக்க... JR 29 shooting spot accident : ஜெயம் ரவி, நயன்தாரா சூட்டிங்கில் விபத்து...சினிமா தொழிலாளி கவலைக்கிடம்!
03:06 PM (IST) Aug 12
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
02:54 PM (IST) Aug 12
ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீட்டில் குடியிருப்பவர் மாத வாடகை வழங்கும்போது ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் செலுத்த வேண்டும். இந்த விதிமுறை கடந்த ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்குவந்துள்ளது.இந்த விதிமுறை ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும். விரிவான செய்திகளுக்கு
01:28 PM (IST) Aug 12
15 வயது சிறுமிக்கு திருஷ்டி நிறைய இருப்பதாக சாமியார் கூறியதை நம்பி குழந்தையின் பெற்றோர் தங்களது வீட்டில் 15 நாட்கள் அவரை தங்க வைத்த நிலையில், அவர் திருஷ்டி கழிப்பதாக சொல்லி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது.மேலும் படிக்க
12:53 PM (IST) Aug 12
நாட்டின் 75-வது சுதந்திரதினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் 2 ஆயிரம் தோட்டாக்களை போலீஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விவரங்கள் விரைவில்.........
12:37 PM (IST) Aug 12
சென்னையில் இன்று 30 க்கும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்துக்கொள்ளும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்கள் இணைந்து இதனை நடத்துகின்றன. இதில் கலந்துக்கொள்ளும் நிறுவனங்களில் காலியாக பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.மேலும் படிக்க
12:31 PM (IST) Aug 12
வகுப்பறைக்குள் மாணவ மாணவியர்கள் கட்டி அனைத்துக்கொண்டு நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
12:03 PM (IST) Aug 12
சென்னை தீவுத்திடலில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 3 நாட்கள் நடைபெறும் உணவுத் திருவிழா இன்று தொடங்கியது.இன்று முதல் ஞாயிறுக்கிழமை வரை நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் மொத்தம் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் படிக்க
11:28 AM (IST) Aug 12
சினிமா பிரபலங்களின் மகனோ அல்லது மகளோ, சினிமாவில் அறிமுகமானால் அதிகளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அத்தகைய எதிர்பார்ப்புடன் தமிழ் சினிமாவில் புது வரவாக காலடி எடுத்து வைத்திருப்பவர் அதிதி ஷங்கர். இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் டாக்டர் படிப்பை முடித்தவுடன் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் நடிக்க வந்துவிட்டார். மேலும் படிக்க
11:21 AM (IST) Aug 12
நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணைப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.மேலும் படிக்க
10:33 AM (IST) Aug 12
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தாயார் பயணம் செய்த காரின் இரண்டு டயர்களும் ஒரே நேரத்தில் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
10:21 AM (IST) Aug 12
கொம்பன், மருது, தேவராட்டம் என கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதற்கு பெயர்போன இயக்குனரான முத்தையா விருமன் படத்தையும் அதே பாணியில் இயக்கி உள்ளார். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் 475 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.மேலும் படிக்க
10:17 AM (IST) Aug 12
மகளிருக்கான இலவச பேருந்துகளை முழுமையாக பிங்க் நிறத்திற்கு மாற்றும் நடவடிக்கையில் போக்குவரத்துத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பேருந்தின் இருபுறங்களில் மட்டும் பிங்க் பெயிண்ட் அடிக்கப்பட்ட நிலையில், தற்போது முழுமையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
09:53 AM (IST) Aug 12
சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறாத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பீஃப் பிரியாணி அரங்குகள் அமைக்க விற்பனையாளர்கள் யாரும் முன் வரவில்லை என அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
09:30 AM (IST) Aug 12
கரூரில், பள்ளி சீருடையில் மாணவிகள் மது போதையில் தள்ளாடிய விவகாரம் தொடர்பாக மாணவிகளை வற்புறுத்தி மது அருந்தவைத்த தீனா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
08:36 AM (IST) Aug 12
தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுக நுழைவாயிலை உடனடியாகச் சீரமைத்து, மீனவர்களின் உயிரிழப்பதைத் தடுக்க வேண்டும்! எனநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
08:27 AM (IST) Aug 12
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் 5ஜி சேவையை இந்த மாதத்திலேயே தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது.
08:27 AM (IST) Aug 12
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 1000 நகரங்களில் 5ஜி சேவை தொடங்குவதற்கான பணிகளை முடித்துவிட்டது. முதல் கட்டமாக 22 பெருநகரங்களில் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
08:26 AM (IST) Aug 12
Sani Peyarchi 2022 Palangal: சனி பகவான் மகர ராசியில் வக்ர பெயர்ச்சி, இன்னும் 3 மாதங்கள் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் உண்டாகும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
08:26 AM (IST) Aug 12
விருமன் படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி கிடைக்காததால், பெரும்பாலான இடங்களில் 6 மணிக்கு மேல் தான் முதல் காட்சி திரையிடப்பட்டன. சில இடங்களில் ரசிகர்கள் அதிகாலையில் படம் எப்படியாவது ரிலீஸ் ஆகிவிடும் என ஆவலோடு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நிகழ்வுகளும் அரங்கேறின.மேலும் படிக்க
08:26 AM (IST) Aug 12
கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
08:05 AM (IST) Aug 12
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பாண்டு 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சீனிவாசா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளது.
07:32 AM (IST) Aug 12
நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பாஸ்கர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
07:29 AM (IST) Aug 12
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டும் என கூறும் தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.