House Rent GST : வாடகை வீட்டில் குடியிருப்போர் 18% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டுமா? புதிய விதி என்ன சொல்கிறது
ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீட்டில் குடியிருப்பவர் மாத வாடகை வழங்கும்போது ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் செலுத்த வேண்டும். இந்த விதிமுறை கடந்த ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்குவந்துள்ளது.
ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீட்டில் குடியிருப்பவர் மாத வாடகை வழங்கும்போது ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் செலுத்த வேண்டும். இந்த விதிமுறை கடந்த ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்குவந்துள்ளது.
இந்த விதிமுறை ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும்.
விவசாயிகள் கவனத்திற்கு! பிஎம் கிசான் 12வது தவணை: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
இதற்கு முன், வர்த்தகரீதியான இடங்கள், அலுவலகங்கள், காலி இடங்களை வாடகைக்கோ அல்லது லீசுக்கோ வழங்கினால் அதற்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், வீட்டு குடியிருப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ வாடகைக்கு விட்டிருந்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி இல்லாமல் இருந்தது.
ஆனால் புதிய விதியின்படி, ஜிஎஸ்டியின் கீழ் வாடகைதாரர் பதிவு செய்திருந்தால், அவர் ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிஸம் விதியின் கீழ் 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த 18 சதவீத வரியை வாடகைதாரர் இன்புட் டேக்ஸ் கிரெடிட் மூலம் கழித்துக்கொள்ளலாம்.
வருமானவரி செலுத்துவோருக்கு கிடுக்குப்பிடி! அக்-1 முதல் இந்த திட்டம் கிடையாது:
இந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரி ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும், அவர் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வீட்டின் உரிமையாளர் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால் சாதாரண வீடு அல்லது பிளாட், சிறிய வீட்டில் மாத வாடகைக்கு வசிப்பவர்கள் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
முந்தப்போவது யார்? ரிலையன்ஸ் ஜியோ-வுக்குப் போட்டியாக இம்மாதமே 5ஜி சேவை: ஏர்டெல் அறிவிப்பு
ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த ஒருவர், வர்த்தகம் அல்லது வேறு தொழில் செய்யும்போது, 18 சதவீதம் வரியாக வாடகை வழங்கும்போது உரிமையாளரிடம் செலுத்த வேண்டும்.
ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒருவர் வீட்டுக் குடியிருப்பின் சேவையைப் பெறும்போது அவர் 18சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு அதிகமாக விற்றுமுதல் செய்தால் அவர் ஜிஎஸ்டி வரம்புக்குள் வந்து ஜிஎஸ்டி பதிவு செய்ய வேண்டும்.
- 18% GST on house rent
- GST for Guest House
- GST for Rentals House
- GST for commercial Tenant
- GST for commercial rent
- GST on rentals
- goods and service tax
- gst
- gst for rental income
- gst house rent
- gst on rent
- gst on home rent
- gst on house rent
- gst on house rent income
- gst on rental
- gst on rental income
- gst rent
- house rent
- house rent gst
- house rent tax
- rent
- reverse charge gst
- tax on house rent
- tenant 18% GST