Atal Pension scheme:வருமானவரி செலுத்துவோருக்கு கிடுக்குப்பிடி! அக்-1 முதல் இந்த திட்டம் கிடையாது:

வருமானவரி செலுத்துவோர் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் சமூக பாதுகாப்புத் திட்டமான அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர்வதற்கு அனுமதி கிடையாது என்று மத்திய நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

From October 1, income tax payers will be unable to enrol in the Atal Pension Yojana.

வருமானவரி செலுத்துவோர் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் சமூக பாதுகாப்புத் திட்டமான அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர்வதற்கு அனுமதி கிடையாது என்று மத்திய நிதிஅமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசு அடல் பென்சன் திட்டத்தைக் கொண்டு வந்தது.இதன்பிடி அமைப்பு சாரா பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்கள் இந்த திட்டத்தில் பணம் செலுத்தினால் 60வயதுக்குப்பின் ரூ.1000 முதல் ரூ.5ஆயிரம் வரை ஓய்வூதியம் கிடைக்கும்.

முந்தப்போவது யார்? ரிலையன்ஸ் ஜியோ-வுக்குப் போட்டியாக இம்மாதமே 5ஜி சேவை: ஏர்டெல் அறிவிப்பு

From October 1, income tax payers will be unable to enrol in the Atal Pension Yojana.

கடந்த 7 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்த திட்டதில் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “ அக்டோபர் 1ம் தேதி முதல் வருமானவரி செலுத்துவோர் யாரும் அடல் பென்சன் திட்டத்தில் சேர்வகற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேநேரம் அக்டோபர் 1ம் தேதிககுள் சேர்வதற்கு தடையில்லை, ஏற்கெனவே சேர்ந்து உறுப்பினராக இருந்தாலும் பாதிக்கப்படாது.

கவுதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு: உள்துறை அமைச்சகம் முடிவு

அக்டோபர் 1ம் தேதிக்கு  பின் அல்லது அதற்கு முன் அடல் பென்சன் திட்டத்தில் ஒருவர் சேர்ந்திருந்தால், அவர் வருமானவரி செலுத்தியவரா அல்லது இல்லையா என்பது கண்டறியப்படும். அவர் வருமானம் செலுத்துபவராக இருந்தால், அவர் இதுநாள்வரை செலுத்திய பணம் திருப்பித் தரப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

From October 1, income tax payers will be unable to enrol in the Atal Pension Yojana.

வருமானவரி சட்டத்தின்படி ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் வருமானம் ஈட்டுவோர் வருமானவரி செலுத்தத் தேவையில்லை.

மக்கள் பணம் ரூ.96 கோடியை மோசடி செய்த அஞ்சல ஊழியர்கள்: சிஏஜி அறிக்கையில் ஷாக்

18முதல் 40வயதுள்ள அனைத்து பிரிவினரும் அடல் பென்சன் திட்டத்தில் சேரலாம். வங்கி  அல்லது அஞ்சலகம் மூலம் இந்த திட்டத்தில் சேரலாம். தற்போது அடல் பென்சன் திட்டத்தில் 2022 மார்ச் வரை 4.01 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த நிதியாண்டு மட்டும் 99 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios