15 வயது சிறுமிக்கு திருஷ்டி நிறைய இருப்பதாக சாமியார் கூறியதை நம்பி குழந்தையின் பெற்றோர் தங்களது வீட்டில் 15 நாட்கள் அவரை தங்க வைத்த நிலையில், அவர் திருஷ்டி கழிப்பதாக சொல்லி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது.  

சென்னை அடுத்த கோயம்பேட்டில் வசிக்கும் 36 வயதான பெண் ஒருவர் தாம்பரத்தில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 3ம் தேதி தனது குடும்பத்துடன் கங்கையம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அந்த கோவிலில் பூசாரியான 55 வயதாகும் சந்திரசேகர் என்பவர் அந்த பெண்ணிடம் உங்களுடைய 15 வயது மகளுக்கு திருஷ்டி நிறைய இருப்பதாகவும் சிறப்பு பூஜை செய்தால் சரி ஆகிவிடும் என்று தெரிவித்ததாக சொல்லபடுகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மேலும் படிக்க:கள்ளக்காதலனுக்கு சொத்தை மாற்ற முயற்சி.. மருமகளை வெட்டி கொன்று தலையுடன் போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த மாமியார்

மேலும் அவர் உங்கள் வீட்டில் 15 நாட்கள் தங்கி தான் அந்த சிறப்பு பூஜை செய்ய முடியும். அப்போது தான் உங்கள் மகளுக்கு இருக்கு திருஷ்டி எல்லாம் கழியும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை நம்பிய சிதரா, அந்த பூசாரியை தனது வீட்டில் தங்கி கொள்ள சம்மதித்துள்ளார். ஆனால் சாமியார் பூஜை செய்வதாக கூறி தொடர்ந்து அந்த 15 சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்ந்த நிலையில், சிறுமி தனது தாயிடம் இதுக்குறித்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீட்டில் இருந்த சாமியாரை, சித்ரா தனது கணவருடன் சேர்ந்து அடித்து உதைத்துள்ளார்.

மேலும் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இதுக்குறித்து சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் சாமியாரை கைது செய்ய வந்த போலீசாரிடம் அவர் தப்பித்து ஓடியுள்ளார். தொடர்ந்து பூசாரியை வலை வீசி தேடி வந்த நிலையில் நேற்று மதியம் மதுரவாயல் காவல் நிலையத்தில் அவர் சரணடைந்தார். அவர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க:பள்ளி வகுப்பறைக்குள் எல்லை மீறிய மாணவர்கள்! கட்டிப்பிடித்து கண்ட இடத்தில் கை வைத்து நெருக்கம்! வீடியோ வைரல்.!