மாணவர்களே அலர்ட்!! நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. கூடுதல் விவரம்
நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணைப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் 2022 முதல் 2023ம் கல்வியாண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகளில் சேர 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.இதேபோல் பெண்களுக்கான செவிலியர் பட்டயப் படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.
கடந்த ஜூலை 31 ஆம் தேதி துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது குறித்தான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணைப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியது. இந்த படிப்புகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிப்பு:ஆவினில் அருமையான வேலை.. ரூ.43,000 வரை சம்பளம்.. நாளை தான் கடைசி.. முழு விவரம்..
2022- 2023 ஆம் கல்வி ஆண்டில் Diploma In Nursing, Diploma In Psychiartic, B.SC Nursing, B.Pharm ஆகிய மருத்துவம் சார்ந்த துணைப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மருத்துவ சார்ந்த துணைப் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எனவே விருப்பம் மற்றும் தகுதி உள்ள மாணவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிப்பு:அலர்ட்!! நர்சிங், பி.பார்ம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பது..? கூடுதல் விவரம்..
மேலும் மாணவர்கள் விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை அணுகும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்களை துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.