யாரையும் ஜாதி பார்த்து கைது பண்ணல.. கலவரம் பண்ணவங்களதான் பண்றாங்க, திருமாவளவனை எகிறி அடித்த எச்.ராஜா.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரையும் சாதி பார்த்து கைது செய்யவில்லை என்றும், கலவரத்தில் ஈடுபட்டவர்களைதான் போலீசார் கைது செய்கின்றனர் என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரையும் சாதி பார்த்து கைது செய்யவில்லை என்றும், கலவரத்தில் ஈடுபட்டவர்களைதான் போலீசார் கைது செய்கின்றனர் என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலவரத்தில் ஈடுபட்டதாக தலித்துகளை குறிவைத்து போலீசார் கைது செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ள நிலையில் எச். ராஜா இவ்வாறு விமர்சித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளிகள் பயின்று வந்த 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மாணவி உயிரிழந்ததற்கு நீதிகேட்டு அவரது பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் போலீசார் அதில் மவுனம் சாதித்து வந்தனர். இதனால் இளைஞர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு பள்ளி மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த வாகனங்களையும் தீக்கிரையாக்கினர் அப்போது போலீசார் அதை கலைக்க முயன்றபோது கலவரம் மூண்டது.
இதையும் படியுங்கள்: உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி ஏன் இல்லை.!நானும் பீஃப் சாப்பிடுபவன் தான்.!-மா.சுப்பிரமணியன் புதிய விளக்கம்
கலவரம் திட்டமிட்டு செய்யப்பட்டது என்றும், இதன் பின்னணியில் சில சாதி அமைப்புகள் செயல்பட்டன என்று தமிழக உளவுத்துறை கூறிவருகிறது. இதனையடுத்து கனியமூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த தலித் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தும் அடித்து உதைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதுவரை 500க்கும் மேற்பட்டோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தேர்வு எழுத சென்றவர்கள், வேலைக்குச் சென்று திரும்பியவர்கள், சாலையில் நடந்து செல்பவர்கள் என அப்பாவிகள் பலரையும் போலீசார் அடித்து உதைத்து துன்புறுத்தி கைது செய்வதாக கைதானவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் மல்க கூறிவருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், காவல்துறை சாதிய கண்ணோட்டத்துடன் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றும், சில சாதிய ஆதிக்க சக்திகள் இந்தக் கைதுக்கு பின்னணியில் உள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள்: குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!
எனவே கலவரத்திற்கு தொடர்பில்லாத அப்பாவிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக காரைக்குடியில் செய்தியாளர் சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களைதான் போலீசார் கைது செய்து வருகின்றனர்.
காவல்துறை யாரையும் சாதி பார்த்து கைது செய்யவில்லை என திருமாவளவனின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகளுடன் பாஜகவினர் மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போதைய திருமாவளன் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு எச்.ராஜா சாதி பார்த்து கைது செய்யவில்லை என விமர்சித்திருப்பது விடுதலை சிறுத்தைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.