குடிமகன்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த தினத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் திங்கட்கிழமை முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- வருகின்ற 15-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று சுதந்திர தினத்தினை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், கிளப்புகளைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் பல்வேறு உரிமங்களை கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும்.
இதையும் படிங்க;- போதை இல்லா தமிழகம் சொன்னா மட்டும் போதாது செயலில் காட்டுங்கள் முதல்வரே.. விஜயகாந்த் அதிரடி சரவெடி..!
அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால், மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க;- மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 1 பாட்டில் வாங்கினால், 2 பாட்டில் சரக்கு இலவசம்.! அதிரடி ஆஃபர்