மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 1 பாட்டில் வாங்கினால், 2 பாட்டில் சரக்கு இலவசம்.! அதிரடி ஆஃபர்
ஒரு பாட்டில் சரக்கு வாங்கினால், 2 பாட்டில் சரக்கு இலவசம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. 2021-22 புதிய மதுக் கொள்கையை டெல்லி அரசு கொண்டுவந்தது. அதன்படி, மதுபானங்களை சில்லறை விற்னை செய்துகொள்ளவும், வீட்டிற்கே டெலிவரி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.
பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய கொள்கை இந்தாண்டு ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த கொள்கை அமல்படுத்துவதில் ஆம் ஆத்மி அரசு பெரும் ஊழல் செய்ததாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் குற்றஞ்சாட்டி சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளார். இந்த விவகாரம் டெல்லி ஆம் ஆத்மி அரசு மற்றும் ஆளுநர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தனது புதிய மது கொள்கையை திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
அதாவது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அரசு கடைகளின் மூலமே மது விற்கப்படும் எனவும், இந்த மாற்றத்திற்கான காலத்தில் ஏற்படும் தற்காலிக சிரமத்தை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 468 தனியார் மதுபான கடைகளுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் இன்றுடன் முடிவுக்கு வந்து அவை மூடப்படுகின்றன. இந்த திடீர் முடிவால் தங்களின் சரக்குகளை விற்று தீர்க்க தனியார் கடைகள் பல்வேறு ஆஃபர்களை அறிவித்து ஸ்டாக் கிளியரன்ஸ்சில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு..நீங்க யார் பக்கம்? எடப்பாடி Vs ஓபிஎஸ்.. சசிகலா சொன்ன அந்த பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள் !
டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளன. மது விற்பனை கடைகளுக்கான லைசென்சு பெற புதிய நடை முறையை அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆகஸ்ட் 1ம் தேதி முதல் டெல்லியில் தனியார் மது விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்படுகிறது.
இதனால் தங்களிடம் இருக்கும் மதுபாட்டில்களை முழுவதுமாக விற்பனை செய்ய தனியார் மதுக்கடைகள் ஒரு பாட்டில் சரக்கு வாங்குபவர்களுக்கு 2 பாட்டில் மது இலவசம் என்ற அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டது. இந்த சலுகை அறிவிப்பால் மதுபிரியர்கள் போட்டி போட்டு மது வாங்கி சென்று வருகிறார்கள். இந்த அறிவிப்பு மதுபிரியர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..படம் பாக்குறியா தம்பி.. 15 வயது சிறுவனுடன் ஓட்டம்பிடித்த 4 குழந்தைகளின் தாய் - அடேங்கப்பா.!