சென்னையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்.. 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை.. கொட்டிக்கிடக்கும் காலி பணியிடங்கள்..

சென்னையில் இன்று 30 க்கும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்துக்கொள்ளும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்கள் இணைந்து இதனை நடத்துகின்றன. இதில் கலந்துக்கொள்ளும் நிறுவனங்களில் காலியாக பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.
 

Employment camp today in Chennai - Full details here

சென்னையில் இன்று 30 க்கும் தனியார் துறை நிறுவனங்கள் கலந்துக்கொள்ளும் இலவச வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்கள் இணைந்து இதனை நடத்துகின்றன. இதில் கலந்துக்கொள்ளும் நிறுவனங்களில் காலியாக பணியிடங்களுக்கு தகுதியான ஆட்களை தேர்வு செய்யவுள்ளன.

தமிழ்நாட்டில் உயர் கல்வி படித்து முடித்து வெளியில் வரும் அனைத்து மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி தமிழகத்தை பொருத்தவரை உயர் கல்வி படிப்போரின் எண்ணிக்கை காட்டிலும் வேலை கிடைத்துச் செல்வோரின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் சரி செய்யும் வகையில் அரசும் தனியார் துறையும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன.

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட்!! நர்சிங், பி.பார்ம் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. கூடுதல் விவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் இலவச வேலைவாய்ப்பு முகாம் குறித்து, தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும், 2வது மற்றும் 4வது வெள்ளிக் கிழமைகளில் வேலை தேடுவோர் மற்றும் வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாம், ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று நடைபெறுகிறது.   இந்த முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித் தகுதி உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க:சென்னையில் உணவுத் திருவிழா தொடக்கம்.. 150 அரங்குகளில் விதவிதமான உணவுகள்.. பாரம்பரிய உணவு முதல் அனைத்தும்

முகாமில் 30க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணி காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன. இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் முகாமில் கலந்துகொள்ள எந்த விதக் கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை’’.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios