சென்னையில் உணவு திருவிழா...! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பீஃப் பிரியாணி..விளக்கம் அளித்த அரசு அதிகாரிகள்

சென்னையில் தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி இடம்பெறாத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பீஃப் பிரியாணி அரங்குகள் அமைக்க விற்பனையாளர்கள் யாரும் முன் வரவில்லை என அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.  

A food festival held in Chennai has created a controversy for not having beef biryani stalls

பீஃப் பிரியாணியும் சர்ச்சையும்

பீஃப் என்றாலே தொடர் பிரச்சனைதான் ஏற்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் தான் பிரச்சனை ஏற்படுவதாக நினைத்த நிலையில் தமிழகத்திலும் பீஃப் பிரியாணி தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2022 மே 13,14,15 தேதிகளில் "ஆம்பூர் பிரியாணி திருவிழா" நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த உணவு திருவிழாவில் ஆடு, கோழி, காடை பிரியாணிக்கு மட்டும் அனுமதி வழங்கிய நிலையில் பீஃப் பிரியாணிக்கு அனுமதி வழங்கவில்லை இதனால் சர்ச்சை எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் பிரியாணி திருவிழாவை ரத்து செய்தது. இந்த நிலையில், உணவு வீணாவதைத் தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், உடல் ஆரோக்கியத்திற்கு எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை வகையில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் உணவுத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.

A food festival held in Chennai has created a controversy for not having beef biryani stalls

பீஃப் பிரியாணி விற்பனைக்கு யாரும் வரவில்லை

சென்னை தீவுத்திடலில் தொடங்கியுள்ள இந்த உணவு திருவிழா ஆகஸ்ட் 14ந்தேதி  வரை நடைபெறுகிறது. இந்த உணவுத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 180 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்துள்ளார்.  75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் உணவுத் திருவிழாவில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.  உணவுத் திருவிழாவில் 180 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அரங்கில் கூட பீப் பிரியாணி உணவு இடம்பெறவில்லை இதற்க்கு ஒரு சில சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதிமுகவின் அலட்சிய போக்கை திமுகவும் தொடர்வது வெட்கக்கேடு... இதுதான் விடியல் ஆட்சியா..? சீமான் ஆவேசம்

A food festival held in Chennai has created a controversy for not having beef biryani stalls

இதனையடுத்து சென்னை தீவு திடலில் இருந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் கேட்டபோது பீப் பிரியாணி உணவு விற்பனைக்கு அரங்குகள் அமைக்க யாரும் முன் வரவில்லை என விளக்கம் அளித்தார். பல வகையான உணவுகள் விழா அரங்கில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பீஃப் பிரியாணி இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

விதியை மீறிய திமுக...! நள்ளிரவில் போராட்டத்தில் குதித்த பாஜக... குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios